விதிமீறல்: $300,000 அபராதம்

வெளிநாட்டு ஊழியர்களை அளவுக்கதிக எண்ணிக்கையில் அடைத்து தங்க வைத்திருந்ததன் மூலம் வேலை அனுமதி நிபந்த னையை மீற மூன்று நிறுவனங் களுக்கு உதவியதற்காக வெளி நாட்டு ஊழியர் தங்கும் விடுதி ஒன்றை நிர்வகித்து நடத்தும் நிறுவனத்துக்கு $300,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய ஊழியர் தங்கும் விடுதி நிறுவனம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது சிங்கப்பூரில் இதுவே முதல் முறை. கே.டி. மெஸ்டோர்ம் என்ற நிறுவனம், புளு ஸ்டார் டார்மிட்டரி என்ற இடத்தில் வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தை மீறியிருப்பதாக மனித வள அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூட்டாக அந்த ஊழியர் தங்கு மிடத்தில் சோதனை நடத்தின. அங்கு மொத்தம் 5,098 படுக்கை இடங்கள் காணப்பட்டன. 5,042 வெளிநாட்டு ஊழியர்கள் அங்கு தங்கியிருந்தனர். அந்த தங்குமிடத்தில் 4,500 பேர்தான் தங்கலாம் என்று அங்கீகரிக்கப் பட்டிருந்தது.

பராமரிப்பு சரியில்லாத நிலையில், நெரிசல் மிக்கதாக, அளவுக்கு அதிகமான ஊழியர்கள் தூங்குமிடம். படம்: மனிதவள அமைச்சு