பிரதமருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

பிரதமர் லீ சியன் லூங்கிற்கு ஆகஸ்டு 2ஆம் தேதி அமெரிக்கா வின் வெள்ளை மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் பராக் ஒபாமா அரசாங்க விருந்தளித்துச் சிறப்பிக்கிறார். இத்தகைய வெள்ளை மாளிகை விருந்து மூலம் பிரதமர் லீ கௌர விக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விருந்து நிகழ்ச்சி பற்றி வெள்ளை மாளிகை புதன்கிழமை அறிவித்தது. அந்த விருந்தில் இரு நாட்டுத் தலைவர்க-ளும் சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட இருதரப்பு உறவைக் கொண்டாடு வார்கள் என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.

இரு நாடுகளுக்கும் இடையில் அரசதந்திர உறவுகள் ஏற்படுத் தப்பட்டு இந்த ஆண்டுடன் ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. இரு நாடுகளுக்கு இடைப்பட்ட உறவில் இடம்பெற்றிருக்கும் வளர்ச்சியை அதிபர் ஒபாமாவும் பிரதமர் லீயும் வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்தது. அனைத்துலக சவால்களைச் சமாளிப்பதிலும் ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்குமுறை ஒன்றை முன் னெடுத்துச் செல்வதிலும் சிங்கப் பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட உறவு எப்படி தொடர்ந்து உதவ முடியும் என்பதை இரு நாடுகளின் தலை வர்களும் விவாதிப்பார்கள். வெள்ளை மாளிகை விருந்து என்பது பொதுவாக பிரம்மாண்ட மானதாக படாடோபமான ஒன்றாக இருக்கும்.