ஞாயிறு ரயில் சேவை தாமதம்

சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பில் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு வழித்தடங்களில் 13 ரயில் நிலையங்களில் வரும் ஞாயிறு முதல் ரயில் சேவை தாமதமாகத் தொடங்கும். வடக்கு-தெற்கு வழித்தடத்தில் ஜூ கூன் முதல் குவீன்ஸ்டவுன் வரையிலும் வடக்கு=தெற்கு வழித்தடத்தில் ஜூரோங் ஈஸ்ட் முதல் புக்கிட் கொம்பாக் வரையிலும் ரயில் சேவைகள் வரும் ஞாயிறு முதல் டிசம்பர் 18 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணிக்குத்தான் தொடங்கும்.

ரயில் சேவைக் கட்டமைப்பில் அடுத்த ஆறு மாத காலத்தில் தன்னுடைய பணியாளர்கள் கூடுதலாக 29 இரவு நேரம் பணியாற்றக் கூடிய வாய்ப்பு இதன் மூலம் கிடைக் கிறது என்றது எஸ்எம்ஆர்டி நிறுவனம். இந்தக் கூடுதல் நேரத்தில் பொறியாளர்கள் புதுப்பிப்புப் பணிகளிலும் பராமரிப்புத் திட்டங்களிலும் அதிக நேரத்தைச் செலவிடுவர் என்று இந்த நிறுவனம் குறிப்பிட்டது.

தண்டவாளக் கட்டைகளை மாற்றுவது, சமிக்ஞை சாதனங்களை மாற்றுவது, துணைத் தண்டவாளத்தை மாற்றும் திட்டங்களை மேற்கொள்வது, வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றை முடுக்கிவிட நாங்கள் திட்டமிடுகிறோம் என்று நிறுவனத்தின் திட்டத்துறை இயக்குநர் ரோகர் லிம் தெரிவித்தார். பயணிகள் ஞாயிற்றுக்கிழமையில் காலை 7 மணிக்கு முன்னதாக பயணம் செய்ய வேண்டிய தேவை இருந்தால் மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளைப் பரிசீலிக்கும்படி ஆலோசனை கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!