டியோ: பலதுறை பணி மூலம் ஒருங்கிணைந்த தீர்வு காண்க

வெவ்வேறான அமைப்புகள், துறைகளிடம் இருந்து தகவல்களையும் தொழில்நுட்பங்களையும் பெற்று நாட்டுக்குத் தேவைப்படும் தொழில் நுட்ப அடிப்படை வசதிகளை அரசாங்கத்துறை பொறியாளர்கள் பலப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார். அங் மோ கியோவில் ஐஐடி கல்லூரி மையத்தில் நடந்த பொதுத்துறை பொறியியல் மாநாட்டில் 1,300 அரசாங்கத்துறை பொறியாளர்களிடையே அவர் உரையாற்றினார்.

அப்படி பலதுறைகளையும் உள் ளடக்கிய பணி காரணமாக பரந்த அளவிலான ஒருங்கிணைந்த தீர்வுகளைக் காண முடியும் என்று திரு டியோ குறிப்பிட்டார். நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் திட்டவல்லுநர்களையும் பல் வேறு அரசாங்க அமைப்புகளின் திட்ட வல்லுநர்களையும் அவர் எடுத்துக் காட்டாகக் குறிப்பிட்டார். சாலைக் கட்டமைப்புகள், மக்கள்தொகைக் கணக்கீடுகள், மக்கள், போக்குவரத்து போன்ற வெவ்வேறான தகவல்களை மதிப்பிட்டு அவற்றைக் கண் கூடானவையாக ஆக்கி அவற் றைக் கொண்டு தேசிய அளவிலும் வட்டார நிலையிலும் நகர திட்ட முடிவுகளை அவர்கள் எடுக்கிறார் கள் என்று துணைப் பிரதமர் விளக்கினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!