சிம்ஸ்வில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ

சிம்ஸ்வில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது; ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 6 கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் தீப் பற்றியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு நேற்று பிற்பகல் 12.20 மணியளவில் தகவல் தரப்பட்டது. அந்தக் கட்டடத்தின் பத்தாவது மாடியில் இருந்த வீட்டின் படுக்கையறையில் தீப்பற்றியது. குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து 20 நிமிடங்களுக்குள் தீயை அணைத்தனர். அந்தக் குடியிருப்பிலிருந்து சுமார் 80 பேர் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டனர்.

மெக்ஃபர்சன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் மீட்புப் பணியில் ஈடுபட்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி களுக்கும் போலிஸ் அதிகாரி களுக்கும் தம் ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் நன்றி தெரிவித்தார். அதிகாரிகள் விரைந்து செயல் பட்டது அப்பகுதி குடியிருப் பாளர்களைப் பாதுகாப்பாக உணரச் செய்ததாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டார். மேலும், கட்டடத்தின் கீழ்த் தளத்தில் காத்திருந்த குடியிருப் பாளர்களுக்காகத் தண்ணீர் வழங்கிய ஒரு பெண்மணிக்கும் திருவாட்டி டின் பெய் லிங் நன்றி தெரிவித்தார். தீச் சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. படம்: ஃபேஸ்புக்/ டின் பெய் லிங்