சமூகத்துக்கு உதவும் லெக்சஸ் நிறுவனம்

வில்சன் சைலஸ்

சுகாதார பிரச்­சினை­க­ளோடு தனி நபராக அல்லும் பகலும் உழைத்து குடும்பத்தைப் பரா­ம­ரித்து வரு­கிறார் திரு ராஜேந்­தி­ரன் கிருஷ்­ணன், 50. தம் ஒருவருடைய சம்பாத் தியத்தில் மனைவி, தம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய முயன்று வரும் இவருக்கு மாத இறு­தி­களைச் சமா­ளிப்­பது போராட்டமாகவே இருக்கிறது. இதனால், அவ்­வப்­போது பயனீட்டுக் கட்­ட­ணங்களை திரு ராஜேந்திரன் நேரத்­தோடு செலுத்த இயலாமல் போவதும் அவரது வீட்டில் மின்சாரம் துண்­டிக்­கப்­படுவதும் உண்டு.

மின்கட்டணத்தை திரு ராஜேந்திரன் நேரத்தோடு செலுத்த வேண்டிய கவலையை நீக்கக் கைக்கொ­டுக்­கிறது லெக்சஸ் சிங்கப்­பூர் போன்ற பெரு நிறு­வ­னங்களு­டன் சேர்ந்து செயல்­படும் வட­மேற்கு பய­னீட்டுக் கட்டண உதவித்திட்டம். திரு ராஜேந்­தி­ரன் போன்ற வசதி குறைந்த­வர்­களுக்கு உதவ வட­மேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்­து­டன் பங்கா­ளித்­துவ ஒப்­பந்தத்­தில் நேற்று முன்தினம், இணைந்தது ‘லெக்சஸ் சிங்கப் ­பூர்’ நிறு­வ­னம்.

வட­மேற்கு வட்­டா­ர மேயர் டாக்டர் டியோ ஹோ பின்னிடமிருந்து (வலமிருந்து இரண்டாவது) திரு ராஜேந்­தி­ர­னின் சார்பாக அவ­ருக்­கான பயனீட்டுக் கட்டண உதவித் தொகையைப் பெற்­றுக்­கொண்டார் அவரது மனைவி திரு­வாட்டி அன்­ப­ழகி சந்த­ர­சே­க­ரன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய முதல் சில்லறை விற்பனை எரிபொருள் நிறுவனம் எனும் பெருமையை ‘ஷெல்’ நிறுவனம் பெற்றுள்ளது. படம்: ஷெல்

20 Aug 2019

வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதி: ‘ஷெல்’ அறிமுகம்

இவ்வாண்டில் சிங்கப்பூர் பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது. பின்லாந்தின் எண்ணெய் நிறுவனமான நெஸ்ட் தனது எரிசக்தி புதுப்பிப்பு ஆலை விரிவாக்கத்தில் $2 பில்லியன் செய்யவிருக்கும் முதலீடும் அவற்றுள் அடங்கும். சிங்கப்பூர் துறைமுக கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Aug 2019

சிங்கப்பூர் பொருளியல் இன்னும் மோசமான கட்டத்தை நெருங்கவில்லை