கினபாலு நிலநடுக்கத்தில் சிங்கப்பூர் மாணவர்கள் இறந்து ஓராண்டு நிறைவு

இதே நாளில் சரியாக ஓராண்டுக்கு முன்னர் மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள கினபாலு மலையில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதில் ஏறிக் கொண்டிருந்த தஞ்சோங் காத்தோங் தொடக்கப் பள்ளியின் ஏழு மாணவர்கள், இரு ஆசிரியர்கள், ஓர் சிங்கப்பூர் வழிகாட்டி ஆகியோரின் உயிரைப் பறித்தது. ஆனால் இறந்த தங்களது அன்புக்குரியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று அதே மலையில் ஏறினர் கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட குழு. பெற்றோர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், உறவினர்கள் ஆகியோர் கொண்ட இக்குழுவில் தமது கடைசி மகள் சோனியாவை இழந்த திரு ஜெய்திப் ஜாலாவும் அவரது குடும்பத்தினரும் இடம் பெறுகின்றனர்.

சிறுவர்கள் முடிக்க முடியாத ஒன்றை, அதாவது மலை உச்சியை அடையும் இலக்கை முடிப்பதற்கே இந்த மலையில் ஏற முடிவு செய்ததாக செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் திரு ஜெய்திப். "மேலும் நடந்தது ஒரு இயற்கை பேரிடர் என்பதை நினைவுபடுத்தி இந்த ஒரு சம்பவத்தால் சாகச நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை யாரும் தடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தவும் நான் இந்தச் செயல் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார். திரு ஜெய்திப் தமது மனைவி கேரன், இரு பிள்ளைகள் கரிஸ்மா, 19, டில்லன், 17 ஆகியோருடனும் மலையில் ஏறினார்.

கினபாலு மலையில் இறந்த சிறுமி சோனியாவின் பெற்றோர் திரு ஜெய்திப், கேரன். சோனியா இறந்து சில மாதங்களுக்கு பின்பு எடுக்கப்பட்ட படம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!