இறந்தபின்னும் கற்றுத் தருவோருக்கு மரியாதை

தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் மூன்றாம் ஆண்டில் பயிலும் மு.தினேஷ்குமார், 23, தமது முதல் ஆண்டில் உடற் கூற்றியல் வகுப்பு தொடங்குவதற்கு முன்னர் முக்கியமாக ஓர் உறுதி மொழியை எடுத்துக்கொண்டார். அதாவது தாங்கள் பயிற்சி செய்யவிருக்கும் 'அமைதியான மதியுரைஞர்கள்' (சைலண்ட் மெண்டோர்ஸ்) என அழைக்கப் படும் இந்த உடல்களுக்குத் தக்க மரியாதை கொடுத்து அவர்களுக்கு நன்றியுணர்ச்சியுடன் இருப்பதே அந்த உறுதிமொழி.

திரு தினேஷ்குமாரைப் போல உடற்கூற்றியல் வகுப்புக்குச் செல் லும் முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் முதல் வகுப்புக்கு முன் னால் ஆராய்ச்சிக் கூடத்தில் உடல்களுக்கு முன்னால் கட்டாயம் அந்த உறுதிமொழியை எடுக்க வேண்டும். "இந்த அமைதியான மதியுரை ஞர்களால் பேச முடியாது என்றா லும் தங்கள் உடல்களால் மனித உடலைப் பற்றிய நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அதனால் அவர்களுக்கும் உடல் தானம் செய்தோரின் குடும்பத்தா ருக்கும் மரியாதை கொடுத்து அவர்களை கௌரவிக்க எங்கள் மருத்துவ மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறோம்," என்றார் தேசிய பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி உடற்கூற்றியல் பிரிவின் டாக்டர் கார்த்திக்.

இது மட்டுமல்ல, உடற்கூற்றியல் வகுப்பு முடிவடைந்ததும் மாண வர்கள் தங்கள் தேர்வுகளுக்கு முன்னால் தங்களுக்கு உடல் களைக் கொடுத்து உதவியோருக் கும் அவர்களது குடும்பத்தாருக் கும் நன்றி செலுத்தும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப் படுகிறது. இது போன்று உடல் தானம் செய்த தம் தந்தையின் உடலை மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் பெற்றவர் திருமதி தியாக சுந்தரி ராதாகிருஷ்ணன், 39. கல்லீரல் நோயால் பாதிக்கப் பட்ட திரு கனகசபை ராதா கிருஷ்ணன் கடந்த 2013ஆம் ஆண்டில் மிகவும் அவதிப்பட்டார். சில மாதங்கள் கழித்து தனது 55வது வயதில் அவர் காலமானார். அந்த நேரம் தேசிய பல்கலைக் கழகத்தின் உடற்கூற்றியல் பிரி வினர் தம்மிடம் வந்து ஆறுதல் கூறியதுடன் அவரது தந்தையின் உடல் மரியாதையுடன் நடத்தப்படும் என்றும் உத்தரவாதம் அளித்ததாக திருமதி சுந்தரி கூறினார். உடல்களை 24 மணி நேரத் திற்குள் ஆராய்ச்சிக் கூடத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும். மற்ற வர் கைகள் உடலில் படக்கூடாது என்றும் அவர்கள் விளக்கினர். அதைத் தொடர்ந்து பல்கலைக்கழ கத்தைச் சேந்த ஊழியர் அடிக்கடி தம்முடன் தொடர்பிலும் இருப்பார் கள் என்றார் திருமதி சுந்தரி. மூன்று ஆண்டுகளுக்குப் பின் தம் தந்தையின் உடலைத் திரும்பப் பெற்று வேண்டிய இறுதிச் சடங்கு கடமைகளை நிறைவேற்றினார் திருமதி தியாகசுந்தரி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!