‘மார்பல் கேக்’ சாதனை

திமத்தி டேவிட்

மட்டக் குதிரைச்சவாரி, விளை யாட்டுக் கூடங்கள், பாரம்பரிய நிகழ்ச்சிகள், கேக் அலங்கரிப்புப் போட்டி என பல நடவடிக்கைகளை வரிசைப்படுத்தி சுமார் 1,900 புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர் கள் ஒன்றுகூட, புக்கிட் பாத்தோக் அடித்தள அமைப்புகளின் ஏற்பாட் டில் நேற்று 'புக்கிட் பாத்தோக் ஃபியஸ்டா' எனும் கேளிக்கை விழா நடந்தேறியது.

சிங்கப்பூரிலேயே மிகப் பெரிய 'மார்பல் கேக்'கைத் தயாரிக்கும் முயற்சியில், 2.15 மீட்டர் நீளம் 1.12 மீட்டர் அகலம் என்ற அளவில் இருக்கும் பெரிய கேக் ஒன்றை, சிறு சிறு துண்டுகளைக் கொண்டு புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களின் உதவியால் ஒன்று சேர்த்து சாதனை நிகழ்த் தப்பட்டது. இந்தச் சாதனை சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும், அதே வட் டாரத்தில் வசிக்கும் வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக் கும் கேக் விநியோகிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!