கினபாலு நிலநடுக்க பேரிடரில் இறந்தோருக்கு நினைவஞ்சலி

மலேசியாவின் கினபாலு மலையில் சென்ற ஆண்டு நிகழ்ந்த நில நடுக்கத்தில் பலியானவர்களுக்கு தஞ்சோங் காத்தோங் தொடக்கப் பள்ளியில் நேற்றுக் காலை 7.15 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த இயற்கைப் பேரிடரில் மாண்டவர்களின், உயிர் பிழைத்த வர்களின் குடும்பத்தினரும் ஆசிரி யர்களும் செராயா ரோட்டில் இருக் கும் அந்தப் பள்ளிக்கூடத்தில் கூடி மௌன அஞ்சலி செலுத்தி னார்கள். மலேசியாவின் மவுண்ட் கினபாலு மலையில் நிலநடுக்கம் நிகழ்ந்து சரியாக நேற்று ஓராண்டு ஆனது. பலியானவர்களுக்கு அந்தப் பள்ளியில் நேற்று பிரத்தி யேகமாக 10 நிமிடம் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

அதன் பிறகு அந்தப் பள்ளிக் கூடத்தின் ஓவிய அறையில் சில சிறார்கள் அனுதாபச் செய்தியை ஓவியமாக வரைந்து வெளிப்படுத் தினர். அஞ்சலி நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிமயமானதாக இருந்தது என்று அந்தப் பள்ளிக்கூடத்தின் முதல்வர் கரோலின் ஊ தெரி வித்தார். பள்ளிக்கூடத்தின் பல மாணவர்கள் உயர்நிலைப்பள்ளி களில் படிக்கச் சென்றுவிட்டார்கள். "இந்த ஆண்டு முதலாவது நினைவு ஆண்டு என்பதால் மன உணர்ச்சி அதிகமாகக் காணப்பட் டது. கடந்த ஆண்டு நிலநடுக்கப் பேரிடர் நிகழ்ந்தபோது பொதுமக் கள் அளித்த ஆதரவு, பரிவு, கவலை, பெருந்தன்மை எல்லாவற் றையும் நாங்கள் மிகவும் போற்று கிறோம்," என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!