5 மாதங்களில் 16 சன்னல்கள் விழுந்தன

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சன்னல் கள் கழன்றுவிழுந்த 16 சம்பவங் கள் நிகழ்ந்திருக்கின்றன. இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டு களாகவே குறைந்துவந்துள்ளது என்றாலும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சன்னல்களைக் குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது இடைவிடாமல் தொடர்ந்து பராமரித்து வரவேண் டும் என்று ஆலோசனை கூறப்பட் டிருக்கிறது.

சிங்கப்பூரர்கள் அனைவருக் கும் பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை உறுதிப்படுத்துவதில் ஒவ் வொருவருக்கும் பங்கு உண்டு என்றும் தங்கள் சன்னல்களை இடைவிடாமல் முறையாகச் சோதித்து, பராமரித்து அதன் மூலம் ஒவ்வொருவரும் இதில் தங்கள் பங்கை ஆற்றவேண்டும் என்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது. சன்னல்கள் புழங்கப்புழங்க தேய்மானங்களுக்கு உள்ளாகக் கூடியவை. அவற்றின் பகுதிகள் கழன்றுவிடக்கூடியவை. கெட்டுப் போகக்கூடியவை. அவற்றை அப்படியே விட்டுவிட் டால் சன்னல் கழன்று கீழே விழுந்துவிடும் என்று இந்தக் கழ கத்தின் கட்டட, கட்டுமான ஆணைய சிறப்புச் செயல்கள் குழும இயக்குநர் லிம் பெங் குவி தெரிவித்தார்.