ஞாயிற்றுக்கிழமைகளில் தாமதமாக ரயில் சேவைதொடங்குதல்

சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் ஓடும் ரயில்களில் பராமரிப்புப் பணிகளையும் தண்டவாளங்களில் பழுதுபார்ப்புப் பணிகளையும் மேற் கொள்ளும் பொருட்டு, டிசம்பர் 18ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரயில் சேவை ஒரு மணி நேரம் தாமத மாகத் தொடங்குதல் நேற்றுக் காலை அமலுக்கு வந்தது.

ஜூகூன் முதல் குவீன்ஸ் டவுன் வரையிலும் ஜூரோங் ஈஸ்ட் முதல் புக்கிட் கோம்பாக் வரையி லும் மொத்தம் 13 ரயில் நிலையங் களில் ரயில் சேவை ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7.00 மணிக் குத் தொடங்கும். ரயில் சேவை தாமதமாகத் தொடங்கும் இந்நடவடிக்கையால் எஸ்எம்ஆர்டி பொறியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்வ தற்கு 90 நிமிடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

இது ஆறு மாதங்களுக்கு 29 கூடுதல் இரவு நேரப் பணிகளுக்கு ஒப்பாகும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.00 மணிக்கு முன்பாகவே ரயிலில் பயணம் செய்ய விழைவோ ருக்காக ஜூகூன் நிலையத்திலி ருந்து புக்கிட் கோம்பாக் நிலையம் வரை இரு திசைகளிலும் இலவச இணைப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும். காலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்துகள் சம்பந்தப்பட்ட 13 நிலையங்களை வந்தடையும். நேற்றுக் காலை ஜூரோங் ஈஸ் டிலிருந்து புக்கிட் கோம்பாக்குக் குச் செல்லவிருந்த 74 வயது தொழிற்சாலை ஊழியர் திருவாட்டி டான் கியோக் கெங் இணைப்புப் பேருந்துச் சேவையைப் பயன்படுத் தினார். “தாமதம் ஒரு நாள்தான் என் பதால் அசௌகரியம் எதுவும் இல்லை,” என்று அவர் கூறினார். திருவாட்டி டான் செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நாள்தோறும் காலை 5.30 மணிக்கு வேலைக்குப் புறப்படுகிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்சி ஓட்டுநர் சுயநினைவை இழந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 72 வயதான அந்த டாக்சி ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் காயம் அடைந்தனர். காணொளிப்படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜி ரோடு விஜிலன்ட்

24 Mar 2019

பாதசாரிகள் மீது டாக்சி மோதியதில் பெண் பலி

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி