பிரதமர் லீயின் மூன்று நாள் மியன்மார் பயணம்

மியன்மாரிலிருந்து தமிழவேல்

பிரதமர் லீ சியன் லூங் இன்று முதல் மியன்மாருக்கு மூன்று நாள் அதிகாரத்துவ பயணம் மேற் கொள்கிறார். மியன்மார் தலைநகர் நேப்பிடோவுக்கு இன்று செல்லும் பிரதமர் நாளை  யங்கூனுக்குச் செல்வார். சிங்கப்பூருக்கும் மியன்மாருக் கும் இடையே அரசதந்திர உறவு தொடங்கி  50 ஆண்டு நிறை வாகும் வேளையில் பிரதமர் லீ மியன்மார் பயணம்  மேற்கொள் வது இரு நாடுகளுக்கும் நீண்ட காலமாக நிலவும் நல்லுறவை மேலும் வலியுறுத்துகிறது. மியன்மாரின் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் கொண்ட கடப்பாட்டை இப்பயணம் மீண்டும் உறுதி செய் வதுடன் இருநாட்டுக் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் முறைகளும் பயணத்தின்போது கலந்துரை யாடப்படும்.

மியன்மாரில் கடந்த 1962ஆம் ஆண்டுமுதல் நிலவிய ராணுவ ஆட்சி 2011ஆம் ஆண்டு கலைக் கப்பட்டது. எனினும்,  2015ஆம் ஆண்டு மியன்மாரில் நடந்த முதலாவது ஜனநாயகத் தேர்தலில் திருவாட்டி ஆங் சான் சூ சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி அதிக பெரும்பான்மை வித்தியாசத் தில் வெற்றி பெற்றது.

 

பிரதமர் லீ சியன் லூங். கோப்புப்படம்