கடற்பாலத்தில் விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் கார்

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு கார் நேற்று அதிகாலையில் ஜோகூர் கடற்பாலத்தில் விபத்துக் குள்ளானது. அதிகாலை 4.30 மணிக்கு விபத்துக்குள்ளான கார் ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடந் ததால் சிங்கப்பூருக்கும் மலேசியா வுக்கும் இடைப்பட்ட ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்புக்குள் ளானது என்று ‌ஷின் மின் சீன நாளிதழ் நேற்று தெரிவித்தது. வெள்ளை நிறத்திலான நான்கு கதவுகள் கொண்ட காரை 30 வயதுகளில் உள்ள ஆடவர் ஒரு வர் ஓட்டி வந்தார் என்றும் அச் செய்தி குறிப்பிட்டது.

மலேசிய குடிநுழைவுச் சோத னைச் சாவடி கட்டடத்திலிருந்து கிளம்பி சிங்கப்பூருக்கு அந்தக் கார் வந்து கொண்டிருக்கும்போது, மலேசிய எல்லைக்குட்பட்ட கடற்பா லத்தில் விபத்து நிகழ்ந்தது என்று தாம் அறிந்துகொண்டதாக ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் விபத் துக்குள்ளான கார் ஜோகூர் கடற் பாலத்தில் உள்ள தண்ணீர் குழா யின் மேல் சாய்ந்துக் கிடப்பதைக் காட்டின.

விபத்துக்குள்ளான காருக்குள் சிக்கியிருந்த அதன் ஓட்டுநர் காரிலிருந்து வெளியே வருவதற்கு ஏதுவாக அங்கிருந்த இதர வாகனமோட்டிகள் காரைப் பக்கவாட்டில் தள்ளுகின்றனர். படம்: ‌ஷின் மின் வாசகர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!