அமைச்சரின் மருத்துவச் செலவு: மன்னிப்புக் கேட்டது இணையத்தளம்

சிங்கப்பூரின் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் போன்ற அமைச் சரவை சகாக்கள் அரசாங்க மருத் துவமனைகளிலும் சீரமைக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் இலவச மாக ஏ=வகுப்பு சுகாதாரப் பரா மரிப்பைப் பெறுவதற்கு முழு உரிமைப் பெற்றிருக்கிறார்கள் என்று சமூக, அரசியல் இணைத் தளமான டிஆர் எமேரிட்டஸ் TR Emeritus (TRE) தெரிவித்திருப்பது அப்பட்டமான பொய் என்றும் அது தவறான வழிக்காட்டக்கூடிய ஒன்று என்றும் அரசாங்கம் நேற்றுக் குறிப்பிட்டது. “அமைச்சர் திரு ஹெங்கின் மருத்துவச் செலவு மக்களின் வரிப் பணத்தைக்கொண்டு ஈடு செய்யப்படுகிறது என்ற எண் ணத்தை உண்டாக்கும் வகையில், வேண்டும்மென்றே இத்தகைய தகவல்களை வெளியிட்டு, அதன் மூலம் அந்த இணையத்தளம் பொதுமக்களுக்குத் தவறான வழியைக்காட்ட முயன்று இருக்கிறது,” என்று அரசாங்கம் தெரி வித்துள்ளது. இதன் தொடர்பிலான அறிக்கை Gov.sg ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது.

நிதி அமைச்சர் ஹெங்கின் மருத்துவச் செலவு வரி செலுத்து வோரின் பணத்தைக்கொண்டு ஈடுசெய்யப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. “உண்மை நிலவரங்களைச் சோதிக்க விரும்பியிருந்தால் அந்த இணையத்தளத்திற்கு எல் லாம் விவரமாகத் தெரிந்திருக் கும். பெரும்பாலான அரசாங்க ஊழியர்களைப் போலவே அமைச் சர்களும் ‘மருத்துவக் கணக்கு மற்றும் மானியத்துடன் கூடிய வெளிநோயாளி திட்டம்’ என்ற அதே மருத்துவ நன்மைத் திட் டத்தில்தான் இடம்பெறுகிறார்கள்,” என்று அரசாங்கம் குறிப்பிட்டது.