சிங்கப்பூர்-மியன்மார்: விசா தேவையில்லை

மியன்­மா­ரி­லி­ருந்து தமி­ழ­வேல்

வரும் டிசம்பர் முதல் தேதியில் இருந்து மியன்­மாருக்கு குறுகிய கால பயணம் செல்ல சிங்கப்­பூ­ரர்­களுக்கு இனிமேல் விசா தேவை யில்லை. அதேபோல மியன்­மார் நாட்­ட­வ­ருக்­கும் சிங்கப்பூர் விசா தேவை­யி­ருக்­காது. சாதாரண கடவுச்சீட்டை வைத்­தி­ருக்­கும் சிங்கப்­பூ­ரர்­களும் மியன்­மார் நாட்­ட­வ­ரும் ஒரு மாதம் வரை விசா இல்­லா­மல் ஒருவர் மற்­ற­வ­ரது நாட்டில் தங்கலாம். மியன்­மா­ருக்கு மூன்று நாட் கள் அதி­கா­ரத்­துவ பயணம் மேற்­கொண்­டுள்ள பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று மியன்­மார் அதிபர் தின் சாவ் அளித்த விருந்து உ­ப­ச­ரிப்­பில் இதனை அறிவித்தார். முன்னதாக பிரதமர் லீயும் மியன்­மார் அரசாங்க ஆலோ­ச­கர் திரு­வாட்டி ஆங் சான் சூ சீ முன்னிலையில் மியன்மாருக்கான சிங்கப்பூர் தூதர் திரு ராபர்ட் சுவா, மியன்மாரின் வெளியுறவுத் துணை அமைச்சர் திரு கே டின் இருவரும் விசா ரத்து தொடர்பான அரசதந்திர குறிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

இரு நாடுகளுக்கிடையேயும் வளர்ந்து வரும் உறவின் ஒரு பகுதியாக இந்த விசா ரத்து இடம்பெறுகிறது. இருநாடுகளுக்குமிடையே பயணம் செல்வோரின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இரு நாடுகளுக்கிடையே வாரத்திற்கு 49 விமானங்கள் பறக்கின்றன. புதிய ஏற்பாடு இருநாட்டினரும் பயணம் செய்ய மேலும் வசதியாக இருக்கும் என்றார் பிரதமர். மேலும் யங்­கூ­னில் உள்ள சிங்கப்­பூர்­=மி­யன்­மார் தொழில்­முறை கல்விக்கழ­கத்­தில் உச்சத் தேர்ச்சி பெற்ற மாண­வர்­கள் சிங்கப்­பூ­ரில் குறுகியகால கல்வித் தொழில்­முறைப் பயிற்­சித் திட்­டத்தை மேற்­கொள்ள சிங்கப்­பூர் அரசு நிதி உதவி வழங்கவுள்ளது.

மியன்மார் சிங்கப்பூரின் முக் கியமான பங்காளிகளில் ஒன்று. சிங்கப்பூரில் மாணவர்கள், ஊழி யர்கள், தொழில்நுட்பர்கள் எனக் கிட்டத்தட்ட 200,000 மியன்மார் நாட்டவர்கள் வசிக்கின்றனர். அவர்கள் பல வழிகளில் பங்களிக் கின்றனர் என்றார் பிரதமர்.

பிரதமர் லீ சியன் லூங்கிற்கு மியன்மார் தலைவர் தின் சாவும் அவரது துணைவியாரும் நேற்றிரவு விருந்தளித்து உபசரித்தனர். படத்தில் இடமிருந்து மியன்­மார் அரசாங்க ஆலோ­ச­கர் திரு­வாட்டி ஆங் சான் சூ சீ, பிரதமர் லீ சியன் லூங், மியன்மார் அதிபர் தின் சாவ், திருமதி லீ. படம்: சாவ் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!