பழம் வெட்டும் கத்தியுடன் பணிப்பெண் கொலைவெறி

தெலுக் குரோவில் லோரோங் எச், 50சி-யில் இருக்கும் மூன்று மாடி வீடு ஒன்றில் வேலைபார்த்து வந்த இந்தோனீசியாவைச் சேர்ந்த 23 வயது பணிப்பெண், தன்னுடைய முதலாளி தம்பதியைக் கத்தியால் தாக்கியதில் மாது கொல்லப்பட் டார். அந்த மாதின் கணவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. இந்தப் படுபயங்கரச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு நிகழ்ந்ததாகத் தெரிவிக் கப்பட்டது. தாக்கப்பட்ட திரு ஓங் தியாம் சூன், 57, என்ற ஆடவர் சாங்கி பொது மருத்துவமனையில் சிகிச் சை பெற்றார். அவருக்கு கழுத்து, நெற்றி, கால் எங்கும் பல இடங் களிலும் காயங்கள் இருந்தன. இந்தச் சம்பவம் பற்றி மருத்து வமனை படுக்கையில் இருந்தபடி திரு ஓங் பல விவரங்களைத் தெரிவித்தார்.

“வழக்கமாக எனது மனைவி திருமதி சியோவ் கிம் சூ, 59, மாலையில் தொலைக்காட்சி பார்க்க அறைக்கு வருவார். “ஆனால் செவ்வாய்க்கிழமை அவர் வரவில்லை. என் மனை வியை கீழ் மாடியிலிருந்து நான் தேடினேன். இரண்டாவது மாடியில் குளியலறை மூடப்பட்டிருந்தது. “உள்ளிருந்து சத்தம் ஏதும் இல்லை. கை விளக்கையும் சாவி யையும் எடுத்து வரப்போனேன். “கதவைத் திறந்தபோது தரை யில் ஒரே ரத்தமாக இருந்தது. என்ன என்று பார்ப்பதற்குள் எங் கள் பணிப்பெண் பழம் நறுக்கும் கத்தியுடன் என்னைத் தாக்கினார். என் கழுத்தில் வெட்டு விழுந்தது. நான் அதிர்ச்சியில் உறைந்துவிட் டேன்.