நன்னம்பிக்கை தரும் அறப்பணிச் செயல்

புற்றுநோயால் பாதிக்கப்படும் சிறார்களுக்கு உதவ 'கம்ஃபர்ட் டெல்குரோ' நிறுவனம் ஆண்டு தோறும் நிதித்திரட்டி தருகிறது. அதோடு 'நன்னம்பிக்கை தரும் மொட்டை' என்ற திட்டத்திலும் அது பங்கெடுத்துக்கொள்கிறது. மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு ஆர்க்கிட் கண்ட்ரி கிளப் பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த நிறுவனத்தின் டாக்சி ஓட்டி கள் 165 பேர் பங்கேற்று தலை முடியை மழித்துக் கொண்டனர். அவர்களில் திருவாட்டி ஜோசப்பின் கீ, 31, திருவாட்டி கிறிஸ்டி ஃபூ, 56, என்ற இரண்டு பெண்மணி களும் அடங்குவர்.

இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தரும் டாக்சி ஓட்டிகளின் எண் ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறார் புற்றுநோய் அறநிறுவனத்துக்கு ஆதரவு தரப்போவதாக இந்த ஆண்டு சுமார் 50 நிறுவனங்கள் உறுதி தெரிவித்திருக்கின்றன. 'நன்னம்பிக்கைக்கு தலைமுடி' திட்டத்தில் 6,500 பேர் கலந்து கொள்வர் என்பதும் மொத்தம் $36 மில்லியன் திரட்டப்படும் என் பதும் இந்த இயக்கத்தின் இலக் காக இருக்கிறது.

ரோகன் தனராஜன், 13, டாக்சி ஓட்டுநரான பையனின் உறவினர் சத்தியவரதன் இருவரும் ஒன்றாக தலைமுடியை மழித்துக் கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!