ஆசியாவில் ஆக அதிக செலவுமிக்க நகர்களில் 10வது இடத்தில் சிங்கப்பூர்

வெளிநாட்டினரைப் பொறுத்தவரையில், சிங்கப்பூர் ஆசியாவிலேயே ஆக அதிக செலவுமிக்க நகரங்களில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. சென்ற ஆண்டு முடிவில் அது எட்டாவது இடத்தில் இருந்தது.உலக அளவில் பார்க்கையில், சிங்கப்பூர் வெளிநாட்டின ருக்கு ஆக அதிக செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் 13 இடங்கள் மேலே சென்றிருக்கிறது.

ஆண்டுக்கு இரண்டு தடவை வாழ்க்கைச் செலவு பற்றி ஆய்வு நடத்தும் ஈசிஏ இண்டர்நேஷனல் என்ற அமைப்பு, ஆசியாவிலேயே தோக்கியோதான் வெளிநாட்டினரைப் பொறுத்த வரையில் ஆகஅதிக செலவுமிக்க நகரம் என்று தெரிவிக்கிறது. ஹாங்காங், ஷங்ஹாய் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெறுகின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா