மக்களுக்குப் போலிஸ் ஆலோசனை

வெளிநாட்டு அதிகாரிகள்போல் நடித்து மக்களை ஏமாற்றி பணம் கறக்கும் பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படி சிங்கப்பூர் போலிஸ் பொதுமக்களை எச்சரித்திருக்கிறது. அத்தகைய தில்லுமுல்லு பேர்வழிகள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு "உங்கள் பெயருக்கு பார்சல் வந்திருக்கிறது என்றும் அதில் சட்டவிரோதப் பொருட்கள் இருப்பதாகவும் அதிலிருந்து தப்பிக்க பணம் அனுப்பும்படியும் கூறுவார்கள்" என்று போலிஸ் தெரிவித் திருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் முதல் போலிசிடம் 50 புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

பொதுமக்களிடமிருந்து $4 மில்லியனுக்கும் அதிகத் தொகையை இந்தத் தில்லுமுல்லு பேர்வழிகள் ஏமாற்றிப் பெற்றிருக்கிறார்கள். இத்தகைய தொலைபேசி அழைப்புகள் வந்தால் அதை நிராகரித்துவிடும்படி போலிஸ் ஆலோசனை கூறியிருக்கிறது. தனிப்பட்ட விவரங்களை அத்தகைய பேர்வழிகளிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ள போலிஸ், இது பற்றி தகவல் தெரிந்தால் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800-255-0000 என்ற நேரடி போலிஸ் தொலைபேசி வழியாக தொடர்புகொள்ளும்படி அல்லது அவசர உதவி தேவைப்பட்டால் 999 எண் மூலம் போலிசிடம் தொடர்புகொள்ளும்படி ஆலோசனை கூறி இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!