ஆசிரியர்களுக்கு இணைய வசதி தொடரும்

கல்வி அமைச்சின் ஆசிரியர்கள் தங்கள் வேலையிடக் கணினி களில் தொடர்ந்து இணையச் சேவையைப் பெறுவார்கள் என்று தெரிகிறது. நேற்று முன்தினம் இந்தத் தகவலைக் கல்வி அமைச்சு, ஆசிரியர்கள் அனைவருக்கும் அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தது. “கணினிப் பாதுகாப்பு மிரட் டல்கள் அதிகமாகிக் கொண்டு வருவதால், அரசாங்க இணையக் கட்டமைப்புகள் பாதுகாக்கப்படு வது மிகவும் அத்தியாவசியமாகிறது என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந் தது. பள்ளிகளில் அதிக இணையப் பயன்பாட்டைச் சார்ந்து கற்பித்தலும் கற்பதும், இருப்பதால், ஆசிரியர்கள் தொடர்ந்து தங்க ளின் கணினிகளைப் பயன் படுத்தி கற்றல் கற்பித்தல் வளங் களை இணையத்தில் பெறுவார்கள்.

நேற்று முன்தினம், அரசாங்க ஊழியர்கள் பயன்படுத்தும் சுமார் 100,000 கணினிகளில், அடுத்தாண்டு மே மாதம் முதல் இணையத் தொடர்பு துண்டிக் கப்படவிருப்பதாக செய்தி வெளியானது. அரசாங்க ஊழியர்கள் தங்கள் கைபேசிகளைப் பயன்படுத்தி தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்தலாம் என்றும் கூறப் பட்டிருந்தது. வேலை நிமித்தமாக இணையப் பயன்பாட்டுக்கு சிறப்புக் கணினிகள் செயல்படும் என்றும் சொல்லப்பட்டது. இந்தச் செய்தியால், பாதுகாப்புக்கும் செயல்திறனுக்கும் இடையே எது முக்கியமாகக் கருதப்படுகிறது என்ற கேள்விக்கு பலர் எதிர்மறையான கருத்துகளை வெளிப்படுத்தினர்.

இணைய ஊடுருவல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் துணிச்சலான முடிவு என்று சிலர் கூறினர். இதன் மூலம் தங்கள் பணி வாழ்க்கை சிரமமாகக்கூடும் என்றும் பலர் கருத்துரைத்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா