ஜோகூர் செல்ல காருக்கு ஜூலை முதல் $6.70

மலேசியாவின் ஜோகூருக்குள் அடுத்த மாதம் நடுப்பகுதி முதல் நுழையும் சிங்கப்பூர் பதிவு பெற்ற கார்களுக்கும் வெளிநாட்டு வாக னங்களுக்கும் RM20 (S$6.70) கட்டணம் செலுத்த வேண்டும். மலேசியாவின் வாகன நுழைவு அனுமதி முறை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித் தாள் தெரிவித்து இருக்கிறது.

ஜோகூரில் அமைந்துள்ள இரண்டு தரைவழி நுழைவாயில் களில் இந்த அனுமதி முறை ஜூன் 1ஆம் தேதி முதல் செயல் பட்டு வருகிறது. அது இரண்டா வது பாலத்திலும் செயல்படுகிறது. என்றாலும் அதன்படி இப்போது கார்களுக்கு கட்டணம் வசூலிக் கப்படவில்லை. மலேசிய அதிகாரிகள் ஜூலை 15 வரை அந்த முறையைப் பரி சோதித்துப் பார்ப்பதே இதற்குக் காரணம்.

ஜோகூருக்குள் செல்லும் வெளிநாட்டு வாகனங்கள் ஜூலை 16ஆம் தேதி முதல் RM20 சாலைக் கட்டணம் செலுத்த வேண்டும். புதிய அனுமதி முறை சென்ற ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதியே அமலாக இருந்தது. ஆனால் அதைப் பலதடவை மலேசியா தாமதப்படுத்தி வந் திருக்கிறது. தொழில்நுட்பப் பிரச்சினைகளே இதற்கு காரணம். புதிய முறைக்கான கட் டணத்தை மலேசியாவின் விரை வுச் சாலைகள் அனைத்திலும் சாலைக் கட்டணத்தைச் செலுத்த வாகன உரிமையாளர்கள் பயன் படுத்தும் ரொக்க அட்டையைப் பயன்படுத்தி மட்டுமே செலுத்த முடியும்.