விவியன்: இணையத் தடை நோக்கமல்ல

அரசு ஊழியர்களுக்கு இணையத் தடை போடுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். மாறாக, இணையம் வழி தகவல் தேடுதல், இணையம் வழி பரிவர்த்தனைகள் ஆகியவற் றிலிருந்து மின்னஞ்சல் கட்டமைப் புகளை பிரித்துப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக அவர் கூறினார்.

பணியிடக் கணினிகளில் அரசு ஊழியர்களுக்கு இணைய வசதி இருக்கக்கூடாது என்று புதிதாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு அறிவார்ந்த தேசத் திட்டத்துக்குத் தலைமை வகிக்கும் அமைச்சருமான டாக்டர் விவியன் ஆதரவு தெரிவித்தார். அமெரிக்கத் தலைநகர் வா‌ஷிங்டனின் நடைபெற்ற கருத் தரங்கில் கலந்துகொண்ட அமைச்சர் இதுகுறித்து செய்தி யாளர்களிடம் பேசினார். அறிவார்ந்த தேசமாக சிங்கப்பூர் உருவெடுக்க இணையப் பாதிகாப்பு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அரசாங்க ஊழியர்க ளுக்குச் சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!