சுகாதாரப் பராமரிப்பு சவால்களை சமாளிக்க தகவல் பரிமாற்றமும் தேவை

வருங்கால சவால்களை கணக் கில் கொண்டால் சிங்கப்பூரின் இப்போதைய சுகாதாரப் பராமரிப்பு நிலைமை தாக்குப்பிடிக்கக்கூடிய தாக இல்லை என்று சுகாதார துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார். மாநாடு ஒன்றில் பங்கேற்று நேற்று பேசிய அவர், சிங்கப்பூர் எதிர்நோக்கி இருக்கும் இரு முக்கிய சவால்களைச் சுட்டினார். விரைவாக மூப்படையும் மக்கள் தொகை, மெதுவடையும் பொருளி யல் ஆகிய இந்த இரு சவால் களும் சரிவர கவனிக்கப்படாமல் போனால் சுகாதாரப் பராமரிப்பில் பெரும் சுமையை ஏற்படுத்து வதுடன் பொருளியல் சுணக் கத்தையும் உண்டாக்கிவிடும் என்றார் திரு சீ.

சுகாதாரப் பராமரிப்புச் சூழல் தொகுப்பிலுள்ள அமைப்புகளுக்கு இடையேயான கூட்டிணைவும் ஆற்றல்மிக்க சுகாதாரப் பரா மரிப்பு முறைகளும் இச்சவால் களை எதிர்கொள்ள மிகவும் அவசியம் என்றார் அவர். மேலும், சுகாதாரப் பராமரிப்பு வழங்குவோர், கொள்கை வகுப் பாளர்கள், காப்பீட்டு நிறுவனத்தார் ஆகியோருக்கு இடையிலான பங்காளித்துவத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், காப்பீட்டுத் தொகை கோரும் சம்பவங்களின் எண்ணிக்கை, தனியார் மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பு சேவைகளின் கட்டணம் போன்ற தகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள இந்த பங் காளித்துவம் வசதி ஏற்படுத்தித் தரும் என்றார். இவ்வாறு பகிர்ந்துகொள்வ தால் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் சரியான முடிவுகளை எடுக்கவும் திட்டமிடல் நடை முறைகளை மேம்படுத்தவும் முடி யும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!