150,000 பேரை ஈர்த்துள்ள ‘பொங்கோல் சஃப்ரா’

படகு வலித்தல், சைக்கிளோட்டு தல், ஓடுதல் போன்ற துடிப்பான நடவடிக்கைகளில் முன்பைவிட இப்போது அதிகமானோர் குடும்ப மாகப் பங்கேற்பது ஊக்கமளிக் கிறது என்றும் அது குடும்ப உறுப் பினர்கள் அனைவரது உடலுறு தியை மேம்படுத்துகிறது என்றும் தற்காலிக கல்வி அமைச்சர் (உயர் கல்வி, திறன்கள்) ஓங் யி காங் தெரிவித்துள்ளார். நேற்றுக் காலை நடைபெற்ற சஃப்ரா பொங்கோல் நீர்வழிச் சவால் படகு வலித்தல் (Kayaking) நிகழ்ச்சியில் தயார்நிலை தேசிய சேவையாளர்களுடனும் அவர்க ளின் குடும்பத்தாருடனும் பங் கேற்ற தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான திரு ஓங், புதி தாகத் திறக்கப்பட்டிருக்கும் சஃப்ரா பொங்கோல் மன்றம் திறந்த ஒன்றரை மாத காலத்தில் 150,000 வருகையாளர்களை ஈர்த் துள்ளது என்று அறியும்போது உற்சாகம் மேலிடுகிறது என்றும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறி னார்.

சிங்கப்பூரில் உள்ள சஃப்ரா மன்றங்களில் ஆக அதிக வருகை யாளர்களை சஃப்ரா தோ பாயோ ஈர்த்து வருகிறது. அதற்கு அடுத்த நிலையில் சஃப்ரா பொங்கோல் உள்ளது என்றும் கூறினார் சஃப்ரா அமைப்பின் நிர்வாகக் குழுத் தலைவருமான திரு ஓங்.

நேற்று நடைபெற்ற பொங்கோல் நீர்வழிச் சவால் படகு வலித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஓங் யி காங் (முதல் படகு, இடப்பக்கம்) படகு வலித்தல் போன்ற உடலுறுதிக்குச் சவால் விடும் போட்டிகளில் அதிகமானோர் பங்கேற்பது உற்சாகமளிக்கிறது என்றார். படம்: அமைச்சர் ஓங் ஃபேஸ்புக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!