50 ஆண்டு அரசதந்திர உறவு

அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (இடது) நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியை வா‌ஷிங்டனில் சந்தித்தார். இரு நாடுகளுக்குமிடையே கடந்த 50 ஆண்டுகளாக நிலவிவரும் சிறந்த அரசதந்திர உறவுக்கு இருவரும் தங்கள் கடப் பாட்டைத் தெரிவித்துக் கொண்டனர். படம்: வெளியுறவு அமைச்சு