பேராக் ரோட்டில் தமிழ் முரசு நாளிதழின் விளம்பரப் பிரிவு

முஹம்­மது ஃபைரோஸ்

ரேஸ் கோர்ஸ் ரோட்டில் கிட்­டத்­தட்ட ஆறு ஆண்­டு­கள் செயல்­பட்டு வந்த தமிழ் முரசு விளம்ப­ரப் பிரிவு இம்­மா­தம் 6ஆம் தேதி திங்கட்­கிழமை முதல் புதிய வச­தி­களு­டன் பேராக் ரோட்டில் செயல்­படு­கிறது. ஏற்­கெ­னவே விளம்ப­ரப் பிரிவு அலு­வ­ல­கம் லிட்டில் இந்தியா, ஃபேரர் பார்க் எம்­ஆர்டி நிலை­யங்களுக்கு இடையில் அமைந்­தி­ருந்தது.

எம்­ஆர்டி நிலை­யங்களி­ லி­ருந்து தமிழ் முரசு விளம்பர அலுவலகத்துக்கு நடந்து வர சற்றுத் தூரமாக இருந்த­தாக வாடிக்கை­யா­ளர்­கள் சிலர் தெரி­வித்­தி­ருந்த­னர். அதைக் கருத்­தில் கொண்டு அவர்­களுக்கு மேலும் வசதியை ஏற்­படுத்­தித் தர அலு­வ­ல­கம் இப்போது லிட்டில் இந்­தி­யா­வின் மையப் பகு­தி­யில் இயங்­கு­கிறது.

அத்­து­டன், முன்பு இரண்டா­வது தளத்­தில் செயல்­பட்ட அது, அனைத்து வாடிக்கை­யா­ளர்­களும் எளிதில் அணுக வகை செய்யும் விதத்தில் இப்போது தரைத் தளத்­தில் செயல்­படு­கிறது. எப்­போ­தும் வாடிக்கை­யா­ளர்­களுக்கு மேம்பட்ட சேவையை­யும் வச­தியை­யும் கொடுப்­ப­தில் தமிழ் முரசு விளம்ப­ரப் பிரிவு கவனம் செலுத்தி வரு­வ­தாக தெரி­வித்­தார் அதன் மேலாளர் திரு ஜீ. கரு­ணா­நிதி. "ரோச்சோர் ரயில் நிலையம், பேருந்து நிலை­யங்களுக்கு வெகு அரு­கி­லேயே விளம்ப­ரப் பிரிவு அமைந்­துள்­ளது. தரைத் தளத்­தில் அமைந்­துள்­ள­தால் வாடிக்கை­யா­ளர்­களின் கண்­களில் படும்ப­டி­யாக உள்ளது," என்றார் அவர்.

இந்தப் புதிய இடம் விளம்ப­ரப் பிரிவின் செயல்­தி­றன்­மிக்க சேவைக்­கும் நம்ப­கத்­தன்மைக்­கும் வலுச்­சேர்க்­கும் என உறுதி கூறிய திரு கரு­ணா­நிதி, லிட்டில் இந்­தி­யா­வி­லுள்ள வாடிக்கை­யா­ளர்­களைச் சென்றடைய இது வகை செய்­வ­தா­கக் குறிப்­பிட்­டார். தமிழ் முரசில் முதன் முறையாக விளம்ப­ரம் செய்ய பீஷான் வட்­டா­ரத்­தி­லி­ருந்து பேராக் ரோடு அலு­வ­ல­கத்­திற்கு வந்­தி­ருந்த உள­வி­யல் ஆலோ­ச­க­ரான திருமதி சலின் எட்­மண்ட், விளம்ப­ரப் பிரிவின் இட­மாற்­றம் கூடு­த­லான வாடிக்கை­யா­ளர்­களை ஈர்க்க உதவும் என்றார். "இனி, தமிழ் முரசு நாளி­த­ழில் விளம்ப­ரம் செய்ய தூரம் ஒரு பொருட்­டல்ல. அத்­து­டன் இங்கு வழங்கப்­படும் உன்னத சேவையை நான் பாராட்­டு­கி­றேன்," என்றார் அவர்.

விளம்ப­ரப் பிரிவின் புதிய இடம் விளம்ப­ர­தா­ரர்­களு­டனான தொடர்பை வலுப்­படுத்த உதவும் என 'மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்' நகைக்­கடை­யின் நிர்வாகி திரு எம். பரணி தெரி­வித்­தார். கஃப் ரோட்டில் அமைந்­துள்ள 'சன்ஷைன் எக்ஸ்­பி­ரஸ் கார்கோ' நிறுவன உரிமை­யா­ளர் திரு யூசுஃப் அலி, விளம்ப­ரம் தொடர்­பான விவ­ரங்களை நேர­டி­யா­கச் சென்று கேட்­ட­றிய வசதியாக இருக்கும் என்றார்.

பேராக் ரோடு மாயோ ஸ்திரீட் சாலைகள் சந்திக்கும் இடத்தில் வசதியாக அமைந்திருக்கும் தமிழ் முரசு விளம்பரப் பிரிவு, மக்களுக்குச் சேவையாற்ற காத்திருக்கிறது. படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!