இந்தியாவில் மனைக்கட்டு வாங்கிய 33 சிங்கப்பூரர்கள் கவலை; நிலத்தை வாங்கிய நிறுவனத்திடமே திருப்பி விற்க முயற்சி

சிங்கப்பூரர்கள் சிலர் இந்தியாவில் கடந்த 2007க்கும் 2011ஆம் ஆண்டுக்கும் இடையில் தரிசு நிலங்களில் பெரும் பணத்தை முதலீடு செய்தார்கள். அந்த இடத் தில் பிரம்மாண்டமான பங்களாக் கள் எழும், அடிப்படை வசதிகள் உருவாகும், போட்ட பணத்திற்கு 100%க்கும் மேல் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பணத்தை அதில் போட்டார்கள். சிங்கப்பூரர்களான அந்த 33 முதலீட்டாளர்களும் தாங்கள் கொள்முதல் செய்த நிலத்தை விற்கமுடியாமல் இப்போது தடு மாறுகிறார்கள். நிலத்தின் மதிப்பும் குறைந்துவிட்டது. அந்த நிலத்தை தங்களிடம் விற்ற, சிங்கப்பூரில் பதிவு செய்யப் பட்ட கேஎம்ஜிஎம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை அவர்கள் குறைகூறுகிறார்கள். "அந்த நிலம் மேம்படவே இல்லை. அதன் மதிப்பும் கூட வில்லை," என்று கூறும் முதலீட் டாளர்கள், நிலத்தை அந்த நிறு வனத்திடமே திருப்பி விற்க விரும்புகிறார்கள்.

கேஎம்ஜிஎம் நிறுவனம் புக்கிட் மேராவில் இருக்கிறது. நிறுவனத் தின் இயக்குநர் எஸ் குலாமைச் சந்தித்து தாங்கள் நிலத்தை திருப்பி விற்க முடியும் என்ற உத்திரவாதத்தை அவரிடமிருந்து பெறும் நோக்கத்துடன் அந்த முத லீட்டாளர்களில் 20 பேர் அந்த அலுவலகத்திற்குப் போனார்கள். ஆனால் திரு குலாம் அப்போது அங்கு இல்லை. மே மாதம் 16ஆம் தேதி அந்த முதலீட்டாளர்களைத் தான் சந்திப்பதாக திரு குலாம் தொலைபேசி மூலம் அவர்களிடம் தெரிவித்தார். இப்படி இருக்கையில், மே மாதம் 13ஆம் தேதி அந்த முதலீட் டாளர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. இந்த விவகாரத்தை திரு குலாமின் வழக்கறிஞர் நிறுவனமான அத் வைதா லா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் கையாளும் என்று அந் தக் கடிதம் தெரிவித்தது.

இதனிடையே, முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரின் மனைக்கட்டின் மதிப்பைப் பெற தன் கட்சிக்காரர் தயார் என்று அத்வைதா நிறுவனத் தின் இயக்குநர் ஜிபி வாசுதேவன் தன்னிடம் கூறியதாக சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித் தது. ஆனால் அடுத்தடுத்த நடவடிக்கை பற்றி அந்த இயக்குநர் எதையும் தெரிவிக்கவில்லை. முதலீட்டாளர்கள் மீண்டும் கேஎம்ஜிஎம் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றால் அத்து மீறி நுழைந்ததாக அவர்களுக்கு எதிராக போலிசில் புகார் செய்யப் படும் என்று தெரிவித்து அந்த 33 பேருக்கும் தான் கடிதம் எழுதி யிருப்பதாகவும் அந்த இயக்குநர் குறிப்பிட்டார். அதனை அடுத்து முதலீட்டாளர்களில் 20 பேர், கேஎம்ஜிஎம் நிறுவனத்திற்கு எதி ராக போலிசில் புகார் செய்திருக் கிறார்கள். முதலீட்டாளர்கள் 33 பேரும் சென்னையில் தலா சில ஆயிரம் சதுரஅடி பரப்புள்ள 45 மனைக்கட்டுகளை வாங்கினார் கள்-. முதலீட்டாளர்களில் பெரும் பாலானவர்களுக்கு வயது 50க்கும், 60க்கும் அதிகம்.

கேஎம்ஜிஎம் நிறுவனம், சிங்கப் பூரர் நடத்தும் நிறுவனம் என்ப தாலும் வழக்கறிஞர் ஆர். கலா மோகன், முன்னாள் செய்தித் துறையாளரான திரு குலாம் ஆகிய இருவரும் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த நன்கு மதிக்கப்படும் பிரமுகர்கள் என்பதாலும் தாங்கள் அந்த நிறுவனத்தை நம்பியதாக முதலீட்டாளர்கள் தெரிவித்தனர். முதலீட்டாளர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஆனந்தம் தாமஸ், 62, இவர் 2008ல் சுமார் $41,470 தொகைக்கு இரண்டு மனைக்கட்டுகளை வாங் கினார். "என்னுடைய தந்தை இந்தியா வைச் சேர்ந்தவர். எனக்காக இந்தி யாவில் ஒரு சிறு பகுதியை வாங்க நான் விரும்பினேன்," என்றார் அவர்.

பணத்தைக் கொடுத்ததும் முத லீட்டாளர்கள் நிலத்தைப் பார்க்க சென்னை சென்றார்கள். அங்கு பத்திரங்களைப் பெற்றுக் கொண்டார்கள். திரு ஆனந்தம் தாமஸ் சென்ற ஆண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் சென்னை சென்று மனைக்கட்டைப் பார்வையிட்டார். அந்த மனைக்கட்டு மேம்படவே இல்லை. அது ஆக்கிரமிக்கப்பட் டிருந்தது. அந்த நிலத்தை திரும்பவும் கேஎம்ஜிஎம் நிறுவனத் திடம் விற்க அவர் முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனை அடுத்து சக முதலீட்டாளர்களும் இப்படி செய்ய வேண்டும் என்று அவர் வி-ரும்பினார். இதற்கிடையே, சண்டே டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசிய திரு குலாம், 54, யாரையும் ஏமாற்றும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் நிலத்தை விற்க முதலீட்டாளர் களுக்கு உதவ தான் விரும்புவ தாகவும் கூறினார். இருந்தாலும் இப்போதைக்கு அந்த நிலத்தை விற்றால் லாபம் கிடைக்காது என்றார் அவர். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக இறங்கியிருக்கிறது. இந்தியாவில் சொத்துச் சந்தையும் சரியில்லை. இவையே காரணங்கள் என்றார் குலாம். "நீங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதில் உள்ள அபாயங்களை நீங்கள் எதிர்கொள்ளத்தான் வேண் டும்," என்றார் திரு குலாம்.

"ஒரு வீட்டை இப்போது நீங்கள் வாங்குகிறீர்கள். அந்த வீட்டின் விலை இறங்கிவிடுகிறது. இப்படி இருக்கும் நிலையில் அந்த வீட்டை உங்களிடம் விற்றவரிடம் போய் பணத்தைத் திருப்பிக் கொடு என்று கேட்க முடியுமா?" என் றார் திரு குலாம். வழக்கறிஞரான திரு கலா மோகன், 68, கடந்த 2014ல் கேஎம்ஜிஎம் நிறுவனத்தைவிட்டு விலகிவிட்டார். "விற்பதற்கு மேற்கொண்டு எதுவும் இல்லை. அந்த நிறுவனத்திற்கு என்னால் பயனும் இல்லை.

"ஆகையால் நிறுவனத்தை விட்டு விலகுவதற்கு இது தக்க தருணம் என்று நினைத்து நான் விலகிவிட்டேன்," என்றார் திரு கலாமோகன். முதலீட்டாளர்களின் பத்தி ரங்களைத் தான் சரிபார்த்த தாகவும் அவற்றில் எந்தத் தவறும் இல்லை என்றும் எல்லா கொள்முதல்களும் செல்லுபடி யாகக் கூடியவையே என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார். முதலீட்டாளர்களிடையே 45 உடன்பாடுகள் இடம்பெற்றன. அவற்றில் 24 உடன்பாடுகளில் ஓர் அம்சம் இடம்பெற்றுள்ளது. தாங்கள் வாங்கிய நிலத்தை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்போது நிலவும் தலைசிறந்த சந்தை விலையில் நிறுவனத் திடமே திருப்பி விற்கலாம் என்று அந்த அம்சம் உத்திர வாதம் அளிக்கிறது. இருந்தாலும் 27 உடன்பாடு களில் பட்டா இல்லை. இந்தியா வில் பட்டா இல்லாமல் நிலத்தை விற்பது சட்டரீதியில் சாத்தியமாகக்கூடிய ஒன்று என்று கோச்சார் & கோ என்ற இந் தியச் சட்ட நிறுவனத்தின் மூத்த பங்குதாரரான டெல்லியைத் தளமாகக்கொண்ட அலோக் திவாரி என்ற வழக்கறிஞர் கருத்துத் தெரிவித்தார்.

இருந்தாலும் பத்திரத்தைப் பதிவு செய்யும்போது அதிகாரி கள் சில நேரங்களில் பட்டாவை பார்க்க வேண்டும் என்று கேட்பது உண்டு என்றார் அவர். இதற்கிடையே, சேவில்ஸ் என்ற நிலச் சொத்து நிறுவனத் தின் சிங்கப்பூர் ஆய்வு துறைத் தலைவர் ஆலன் சியோங், முதலீட்டாளர்களுக்குச் சில ஆலோசனைகள் கூறினார். வெளிநாடுகளில் முதலீடு செய்யும்போது அந்த நாட்டின் சட்ட ஏற்பாடுகள் வலுவாக இருக்கின்றனவா என்பதையும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்த நாட்டில் சட்டத்தை அம லாக்க முடியுமா என்பதையும் முதலீட்டாளர்கள் சோதிக்க வேண்டும். சொத்துச் சந்தையில் ஈடுபடும் நிறுவனம் எப்படிப்பட் டது என்பதையும் அவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்றார் அவர்.

இந்தியாவில் முதலீடு செய்தவர்களில் ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியரான மனோகரன் ராமசாமி, 64, மற்றொருவர். இவரும் இவருடைய மனை வியும் 2008ல் $129,510 கொடுத்து நான்கு மனைக்கட்டு களை வாங்கினர். இவரின் மனைவி கடந்த மார்ச் மாதம் புற்றுநோய் காரணமாக மாண்டு விட்டார். கேஎம்ஜிஎம் நிறுவனத் துடன் ஏதோ ஒரு வகையில் கணக்கை முடித்துக்கொள்ள தான் விரும்புவதாக மனோகரன் ராமசாமி கூறினார். "என் மனைவி, வேதனை மிக்க கடைசி நாட்களில்கூட நிலத்தை விற்பதன் தொடர்பில் அந்த நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்தார். அதை அந்நிறுவனம் ஏன் நிறைவேற்ற வில்லை என்பது தெரிய வில்லை. உடன்பாட்டை அவர் கள் மதித்து நடக்க இயலும் என்று நான் நினைக்க வில்லை," என்றார் மனோகரன்.

ஆனந்தம் தாமஸ், திரு மனோகரன் ராமசாமி, திரு கோபிநாதன் ராமசாமி இவர்கள் மூவரும் சென்னையில் நிலம் வாங்கிய 33 முதலீட்டாளர்களில் சிலர். படம்: சண்டே டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!