குழந்தை வளர்ப்பில் தந்தையருக்கு முக்கிய பங்கு

சுதாஸகி ராமன்

குழந்தை வளர்ப்பில் தாய்மார் களுக்கு மட்டும் பங்கு உள்ளது என்று முன்பு இருந்த போக்கு மாறி தந்தையரும் குழந்தை வளர்ப்பில் சரிசம பங்காற்ற வேண்டும் என்பது இப்போது வலியுறுத்தப்படுகிறது. அன்னையர்களைப் போல் குழந்தை வளர்ப்பில் சம பங்காற்று வதை ஊக்குவிக்க சிங்கப்பூரில் தந்தையருக்காக மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. இதை மனதில்கொண்டு தந்தை களுக்குக் குழந்தை வளர்ப்பைப் பற்றிய உத்திகளைக் கற்றுக் கொடுக்கும் நோக்கில் ஹெண் டர்சன்- டோசன் சமூக மன்றம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. தந்தையர் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் 2016 குழந்தைக் காட்சியில் சுமார் 200 பேர் பங்கேற்று ஆறு மாதம் முதல் ஆறு வயதுடைய தங்கள் பிள்ளைகளைக் கவனித்துகொள் வது பற்றிய திறன்களைக் கற்றுக் கொண்டனர். ஹெண்டர்சன்- டோசன் சமூக மன்றத்தால் மூன்றாவது முறை யாக நடத்தப்பட்டுவரும் இந்த நிகழ்ச்சியில் இம்முறை, அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி ஜோன் பெரேரா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண் டார்.

“மக்களின் வேண்டுகோளை ஏற்று தந்தையருக்கான மகப்பேறு விடுப்பை அரசாங்கம் அளித்தது. குழந்தை வளர்ப்பில் தந்தையரை ஈடுபடுத்த அரசாங்கத்துடன் சமூகங்களும் ஒன்றிணைந்து முயற்சி எடுக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார் திருவாட்டி ஜோன். குழந்தைகளை உடலுடன் அணைத்துத் தூக்கிக்கொள்ளும் முறைகளைப் பயன்படுத்தும் தந்தையர்கள், தங்கள் குழந்தை களுடன் உள்ள பிணைப்பை வலுவாக்குகிறார்கள் என்பதால் அந்த உத்தி நிகழ்ச்சியில் கற்றுத் தரப்பட்டது.

தந்தையர் தினத்தைக் கொண்டாடும் வகையில் ஹெண்டர்சன்- டோசன் தொகுதியில் நேற்று நடைபெற்ற பேபி சிங்கப்பூர்@சிங்கப்பூர் எனும் நிகழ்ச்சியில் குழந்தைப் பராமரிப்பு உத்திகள் தந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டன. அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு வாட்டி ஜோன் பிரேரா (வலமிருந்து 2வது, பச்சை உடை) நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்