பாட்டாளிக் கட்சி நகர மன்றம்: தணிக்கை முடிந்ததும் கடைசித் தவணைத் தொகை

பொங்கோல் ஈஸ்ட் தொகுதியின் கணக்குத் தணிக்கை இப்போது நடந்து வருகிறது. அது முடிந்ததும் நீண்டநாள் பராமரிப்பு சேமிப்பு நிதியின் கடைசித் தவணைத் தொகை பாசிர் ரிஸ்பொ - ங்கோல் நகர மன்றத்திற்கு மாற்றிவிடப்படும் என அல்ஜுனிட் ஹவ்காங் நகர மன்றத்தின் தலைவர் பிரித்தம் சிங் தெரிவித்தார். கணக்குத் தணிக்கை எந்தத் தேதியில் முடியும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இருந்தாலும் சென்ற செப்டம்பரில் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு 20 மாதங்களுக்குள் அந்தத் தொகை மாற்றிவிடப்பட்டுவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

கணக்குத் தணிக்கை முடிந்ததும் மாற்றிவிடக்கூடிய தொகை எவ்வளவு என்பது துல்லியமாகத் தெரியவரும் என்றார் அவர். கடந்த 2013 இடைத்தேர்தலில் பொங்கோல் ஈஸ்ட் தனித் தொகு தியைப் பாட்டாளிக் கட்சி கைப் பற்றியது. அதற்குப் பிறகு பாட்டாளிக் கட்சி நிர்வகித்து நடத்திய நகர மன்றத்திடம் நீண்டநாள் பரா மரிப்பு சேமிப்பு நிதியின் கடைசித் தவணைத் தொகையை ஒப்ப டைக்க 20 மாதங்கள் பிடித்தது என்று அவர் குறிப்பிட்டார். சென்ற செப்டம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் அந்த தனித் தொகுதியை மக்கள் செயல் கட்சி மீண்டும் கைப்பற்றியது. பாசிர் ரிஸ்பொங்கோல் நகர மன்றத்திற்கு மாற்றிவிடப்பட விருக்கும் அல்ஜுனிட் அவ்காங் நகரமன்றத்தின் நீண்டநாள் பராமரிப்பு சேமிப்பு நிதியின் கடைசித் தவணை பற்றி கருத் துரைத்த திரு சிங், இதற்கு அதிக காலம் ஆகாது. இருந்தாலும் கணக்குத் தணிக்கை முடியும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அல்ஜுனிட் ஹவ்காங் நகர மன்றம் பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றத்திற்கு $20 மில்லியன் நீண்டநாள் பராமரிப்பு சேமிப்பு நிதியை மாற்றிவிட்டிருக்கிறது. பொங்கோல் ஈஸ்ட் தொகுதி 2013 இடைத்தேர்தலில் தோற்றப் பிறகு நான்கே மாதத்திற்குள் மொத்தம் $18 மில்லியன் நீண்டநாள் பராம ரிப்பு சேமிப்பு நிதியை அல்ஜுனிட் ஹவ்காங் பொங்கோல் ஈஸ்ட் நகர மன்றத்திற்குத் தன்னுடைய நகர மன்றம் மாற்றிவிட்டிருந்ததாக பாசிர் ரிஸ் பொங்கோல் நகர மன் றத் தலைவர் ஸைனல் சபாரி கூறி னார். இது அல்ஜுனிட் ஹவ்காங் பொங்கோல் ஈஸ்ட் நகர மன்றத் திற்குச் சேர வேண்டிய $22.5 மில்லியன் தொகையில் 80% என் றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!