கறுப்புப்பண மோசடியை ஒடுக்க தனித்தனி பிரிவு

கறுப்புப்பணத்தை நல்ல பணமாக்கும் மோசடியை ஒடுக்கவும் செயலாக்க நடவடிக்கைகளை வலுப் படுத்தவும் சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகஸ்ட் 1 முதல் தனித்தனி பிரிவுகளை நடத்தவிருக்கிறது. கறுப்புப்பண மோசடி தடுப்புப் பிரிவை அமைக்கப் போவதாக ஆணையம் நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவித்தது. கறுப்புப்பணத்தை நல்ல பணமாக்கும் மோசடி நடவடிக்கைகள், கள்ளத்தனமான நிதியளிப்பு அபாயங்கள் ஆகியவை தொடர்பான கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கான தற்போதைய பொறுப்புகளைப் புதிய பிரிவு சீரமைக்கும். அதோடு, இந்த அபாயங்களைக் கண்காணிக்கவும் நிதி நிறுவனங்கள் இந்த அபாயங்களை எப்படி நிர்வகிக்கின்றன என்பதை நேரடியாகச் சென்று மேற்பார்வையிடவும் மேற்பார்வைக்குழு ஒன்றும் அமைக்கப்படும்.

ஆணையத்தின் வெவ்வேறு பிரிவுகள் இப்பொறுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. புதிய ஏற் பாட்டுடன், மேற்பார்வை கண்காணிப்பு மேம்படும் என எதிர்பார்ப்பதாக ஆணையம் குறிப்பிட்டது. மத்திய வங்கியின் செயலாக்க நடவடிக்கைகளை மையமாக்கி, வலுப்படுத்துவதற்கென தனி யொரு பிரிவும் அமைக்கப்படுகிறது. புதிய செயலாக்கப் பிரிவு, வர்த்தக விவகாரப் பிரிவுடன் சேர்ந்து மூல தனச் சந்தைகளின் ஒழுங்கீனக் குற்றச்செயல்களைக் கூட்டாக விசாரிக்கும். "வெவ்வேறு அளவுகளும் முக்கியத்துவமும் கொண்ட 1,500 நிதி நிறுவனங்களுக்கு மேலாக உள்ளடங்கும் நிதித் துறையில், ஊடுருவி மேற்பார்வையிட்டாலும் கூட ஒழுங்கீன அத்துமீறல்களை யும் தவறான செயல்பாடுகளையும் தடுப்பது சாத்தியமில்லை," என்று ஆணையம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!