ஆறு வாகன விபத்தில் பெண் பாதசாரி காயம்

சிராங்கூன் ரோடு, டவுனர் ரோடு, பூன் கெங் ரோடு ஆகியவற்றின் சந்திப்பில் நேற்றுக் காலை 7.15 மணிக்கு நிகழ்ந்த ஆறு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பெண் பாதசாரி ஒரு வர் காயமடைந்தார். சிராங்கூன் ரோட்டில் ஒரு டாக்சியும் ஒரு லாரியும் அவற்றின் கட்டுப்பாட்டை இழந்தன. சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த 20 வயதுகளில் இருந்த பெண் பாதசாரி ஒரு வரை டாக்சி மோதியது.

பின்னர் அந்த லாரி, நடை மேடை, புல்வெளி ஆகியவற்றைக் கடந்து கார் நிறுத்துமிடத் தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் காயமுற்ற டாக்சி ஓட்டுநரும் பாதசாரியும் டான் டோக் செங் மருத்துவம னைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மது அருந்தியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் வாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கட்டுப்பாட்டை இழந்த லாரியும் அது மோதியதால் சேதமுற்ற கார்களும். படம்: வான்பாவ்