கா. சண்முகம்: அனைவரையும் அரசாங்கம் பாதுகாக்கும்

உள்துறை அமைச்சரும் சட்ட அமைச்சருமான கா. சண்முகம், இன, சமய, பாலின வேறுபாடின்றி அனைத்து மக்களையும் அரசாங் கம் பாதுகாக்கும் என்று அறுதி யிட்டுக் கூறியிருக்கிறார். கதீஜா பள்ளிவாசலும் சமய மறுவாழ்வுக் குழுவும் நேற்று ஏற்பாடு செய்த நோன்பு திறப்பு நிகழ்ச் சியில் பங்கேற்ற அவர் அமெரிக் காவின் ஆர்லாண்டோ நகரில் நடைபெற்ற தாக்குதல் குறித்து கருத்துரைத்தார். "ஓரினக் காதலர்களை இலக்காகக் கொண்டு தாக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தவித அமைப்புக்கும் எதிராக எந்த வித வன்முறைகளையும் ஏற்க முடியாது. இங்கு யாருக்கும் அல்லது எந்த அமைப்புக்கும் எதிராக வன்முறை மிரட்டல்கள் இருந் தால் அதை எதிர்த்து அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். எல்லோரையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் கடமை," என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரும் சுய தீவிரவாத போக்கு கொண்டவர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க மிரட்டலை எதிர் நோக்குகிறது என்று கூறிய அவர், எஸ்ஜி பாதுகாப்பு திட்டத்தின் முக் கியத்துவத்தையும் வலியுறுத் தினார். "பயங்கரவாத மிரட்டலுக்கு எதிரான போராட்டத்தில் மக் களின் ஒத்துழைப்பு அவசியம். அரசாங்கம் மட்டுமே செய்துவிடக் கூடிய காரியமல்ல. ஒட்டுமொத்த மக்களும் ஒவ்வொருவரும் ஆயத்தமாக இருப்பது முக்கியம் என்றார் அவர்.

(இடமிருந்து) உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், மரீன் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இணைப் பேராசிரியர் ஃபாத்திமா லத்தீஃப், அமைச்சர் சண்முகம், உஸ்தாத் முகமது ஹஸ்பி ஹசான், உஸ்தாத் ஹாஜி அலி ஹாஜி முகமது. படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!