நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தமிழில் பட்டயப் படிப்பு

தமிழ்க் கல்வியுடன் கூடிய ஆரம்பகாலக் கல்வி (Diploma in Tamil Studies with Early Education)' எனும் புதிய பட்டயக் கல்வியை நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி 2017 ஏப்ரலில் அறிமுகப்படுத்துகிறது. சிங்கப்பூரில் பாலர் கல்வித் துறை விரிவடைந்து வரும் நிலை யிலும் பயிற்சி பெற்ற பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையிலும் இந்தப் புதிய முயற்சி இடம் பெறுகிறது. தமிழ் மொழி மீது பற்றுக் கொண்டு, பாலர் பள்ளி ஆசிரியர்களாக விரும்பும் மாண வர்கள் இந்தப் புதிய பட்டயப் படிப்பின் மூலம் தங்களது கனவை நனவாக்கும் சாத்தியம் உருவாகி இருக்கிறது. முதலாம் ஆண்டில் மாண வர்கள் செழுமைமிக்க தமிழ் வரலாறு, இலக்கியம், கலாசாரம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் தங் களது மொழிப் புலமையை வளர்த்துக் கொள்ளலாம்.

தமிழ்த் திரைப்படமும் கலை களும்=அறிமுகம், தமிழ்க் கலை களும் சமகால சமுதாயமும் போன்ற பாடப் பிரிவுகள் மூலம் இரண்டாம், மூன்றாம் ஆண்டு களிலும் மாணவர்கள் தங்களது கலாசாரப் பயணத்தைத் தொட ருவர். சிறுபிள்ளைகளுக்கு மொழியையும் எழுத்தறிவையும் கற்றுத் தரும் வகையில் குழந்தை மேம் பாடு பற்றியும் அவர்கள் கற்பர். அத்துடன், உள்ளூரில் அல்லது வெளிநாட்டில் ஒரு கலாசார ஈடுபாட்டுத் திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பையும் மாணவர்கள் பெறுவர். மேலும், பயிற்சிப் பட்டறை களில் கலந்துகொள்ளவும் வெளி நாடுகளில் பாலர் கல்வித் துறையில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள் ளவும் ஏதுவாக அனைத்துலகக் கல்விப் பயணத் (ஜிஇடி) திட்டத் திற்கு விண்ணப்பிக்கவும் அவர்கள் தகுதி பெறுவர்.

சிறுகுழந்தைகளுக்குத் தமிழைக் கற்றுத் தரும் விதமாக ஏதேனும் ஒரு பாலர் பள்ளியில் அவர்கள் மூன்று மாத காலம் உள்ளகப் பயிற்சி மேற்கொள்வர். தங்களது கல்விக் கட்டணத் திற்காகவும் மாதாந்திர உதவித் தொகைக்காகவும் ஆரம்பகால குழந்தைப்பருவ மேம்பாட்டு முக வையின் பயிற்சி விருது அல்லது கல்வி அமைச்சின் ஆசிரியர் பயிற்சித் திட்டத்திற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் மொழி பாலர் கல்வி ஆசிரியராக அவர்கள் பட்டம் பெற்ற பிறகு, கல்வி அமைச்சின் தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் அவர்களால் தொடக்கப் பள்ளி தமிழாசிரியர் பணிக்கும் கல்வி அமைச்சில் விண்ணப்பிக்க முடியும். அல்லது என்ஐஇ, என்டியு, என்யுஎஸ், சிம் பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிலையங்களில் மேற்கல்வி பயிலலாம்.

'டிஎஸ்இ' என அழைக்கப்படும் இந்தப் புதிய பட்டயக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் www.polytechnic.edu.sg என்ற இணையத்தளம் வாயிலாக புதிய முன்கூட்டிய சேர்க்கை நடவ டிக்கை (இஏஇ) மூலம் இம்மாதம் 22 முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேல்விவரம் தேவைப்படுவோர் www.np.edu.sg/tse என்ற இணையப் பக்கத்தை நாடலாம்.

கூடுதல் செய்தி: வில்சன் சைலஸ், ப.பாலசுப்பிரமணியம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!