அங் மோ கியோவில் ‘டிபி’ பரிசோதனை

அங் மோ கியோ அவென்யூ 3 புளோக் 203ல் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு சுகாதார அமைச்சு காசநோய் (டிபி) பரிசோதனை அளிக்க முன்வந்துள்ளது. அந்த புளோக்கில் உள்ள அறுவருக்கு காசநோய் இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் ஆனால் அவர்களின் நோய் ஒருவருடன் ஒருவர் தொடர்பு இல்லாதது என்றும் அமைச்சு விளக்கியது. இலவசமாக அளிக்கப்படும்

இந்தப் பரிசோதனைகள் இன்று முதல் 19ஆம் தேதிவரை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை புளோக் 203 வெற்றுத் தளத்தில் இடம் பெறும். இந்தத் தேதிகளுக்குள் பரிசோதனை செய்து கொள்ள முடியாதவர்கள் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் ‘சாட்டா’ சமூக சுகாதார மருந்தகத்தில் செய்துகொள்ளலாம். அந்த புளோக்கில் 2011 ஜூலை முதல் வசித்த முன் னாள் குடியிருப்பாளர்கள் இந்த இலவசப் பரிசோதனையில் பங்கேற்க விரும்பினால் அவர்கள் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் ‘சாட்டா’ மருந்தகத்துக்குச் செல்லலாம்.