அமைச்சு விளக்கம்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் ஏற்பட்ட புகைமூட்ட நெருக் கடிக்கு காரணமான இந்தோனீ சிய காட்டுத் தீயுடன் தொடர் புடைய நிறுவனங்களுக்கு எதிராக சிங்கப்பூர் மேற்கொண்ட நடவடிக்கையானது சுயாதிபத்திய உரிமைப் பிரச்சினையோ தேசிய கௌரவப் பிரச்சினையோ அல்ல என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் எல்லை கடந்த காற்றுத் தூய்மைக்கேட்டை உண்டாக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே எல்லை கடந்த காட்டு தூய்மைக் கேடு சட்டத்தின் நோக்கம் என்று அமைச்சு விளக்கியது.

இந்தோனீசிய துணை அதிபர் ஜுசுப் கல்லாவும் அந்த நாட்டின் சுற்றுப்புற, காட்டுவள அமைச்சர் சித்தி நுர்பையாவும் அண்மையில் தெரிவித்த கருத்துகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் அமைச்சு இவ்வாறு கூறியது. இந்தோனீசியாவுடன் கூடிய இருதரப்பு உறவை சிங்கப்பூர் எப்போதுமே கட்டிக்காத்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சின் பேச்சாளர், இந்தோனீசியாவில் முதலீடு செய்யும்படி சிங் கப்பூர் நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுவதற்கு இதுவே காரணம் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!