ஆடவரின் மூக்கை உடைத்த கதிரவன்

மோட்டார்சைக்கிள் ஓட்டி ஒருவர் கார் பேட்டையில், வாகன ஓட்டுநர் ஒருவரின் மூக்கை உடைத்துவிட்டார். இந்தச் சம்பவம் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நிகழ்ந்தது என்று நீதிமன்ற விசாரணை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. காயம் விளைவித்ததாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து கதிரவன் அண்ணாமலை என்ற அந்த பாரம் தூக்கி ஓட்டுநருக்கு நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிராங்கூன் நார்த் அவென்யூ 1ல் உள்ள புளோக் 154ல் இருக்கும் கார்பேட்டையில் ஜனவரி மாதம் 19ஆம் தேதி இரவு சுமார் 8.40 மணிக்கு எல்சன் லீ ஜுன் லியாங், 32, என்ற பொறியாளர் ஒருவர் தன்னுடைய காரை நிறுத்திக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் காரை பின் பக்கமாக நகர்த்தினார். அப்போது கதிரவன் தன் னுடைய மோட்டார்சைக்கிளில் அந்த கார் பேட்டைக்குள் வந்து திரு லீயின் காரின் பின் பகுதி யில் காரை உரசுவதைப் போல கடந்துசென்றார். அதை அடுத்து இருவருக் கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திரு லீ, கதிரவனின் மோட்டார் சைக்கிளை தன்னுடைய செல் பேசியில் படம் எடுக்க முயன் றார். அப்பொழுது அந்த செல் பேசியைத் தடுத்து நகர்த்த கதிரவன் முயன்றார். பிறகு அவர் திரு லீயின் முகத்தில் குத்தினார். அவரை பிடித்துத் தள்ளினார். அதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து லீயை கதிரவன் குத்தினார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகே வசிக்கும் கதிரவனின் உறவினர்கள் இரு வரையும் விலக்கிவிட்டனர். திரு லீ போலிசை அழைத்தார். திரு லீக்கு மூக்கில் எலும்பு உடைந்துவிட்டது. அவர் மருத் துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தக் குற்றச் செயலின் பேரில் கதிரவனுக்கு இரண்டு ஆண்டுச் சிறை, $5,000 அபராதம் விதிக்கச் சட்டத்தில் இடம் இருக்கிறது.