ஜூன் பிற்பகுதியில் அதிக மழைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் இந்த மாதம் இரண்டாம் பாதியில் அதிக மழை பெய்யக்கூடும். காற்றும் வீசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று இதனை அறிவித்தது. ஐந்து முதல் ஏழு நாட்களில் பகல் நேரத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக காலையில் பின்நேரத் திலும் பிற்பகலிலும் கொஞ்ச நேரத்துக்கு மழை பெய்யக்கூடும் என்று இந்த வாரியம் கூறியது. பரவலான இடியுடன் கூடிய மழை எப்பொழுதாவது காற்றுடன் சேர்ந்து 1 முதல் 2 நாட்களில் அதிகாலை நேரத்திலும் காலை நேரத்திலும் பெய்யக்கூடும்.

ஜூன் மாத மழை ஏறக்குறைய சராசரி அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தின் முதல் பாதி யில் நிலவிய தென்மேற்குப் பருவநிலை இம்மாதம் முழுவதும் நிலைத்திருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. தென்கிழக்கிலிருந்து அல்லது தென்மேற்கிலிருந்து இலேசான காற்று வீசக்கூடும் என்றும் முன் னுரைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதத்தில் கூடினபட்ச வெப்பநிலை 32 டிகிரி செண்டி கிரேடுக்கும் 33 செண்டிகிரேடுக் கும் இடைப்பட்டிருக்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் முன்னுரைத்துள்ளது.+0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா