93% ஓட்டுநரைச் சேர்த்தது கோ அஹெட்

சிங்கப்பூரில் பொதுப் பேருந்துச் சேவையை நடத்தவிருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த கோ அஹெட் நிறுவனம் தனக்குத் தேவையான பேருந்து ஓட்டுநர்களில் 93%க்கும் அதிகம் பேரை வேலையில் சேர்த் திருக்கிறது. லோயாங் பேருந்துப் பணி மனையில் நேற்று செய்தியாளர் களிடம் அந்த நிறுவனம் பல விவரங்களைத் தெரிவித்தது. சிங்கப்பூரில் பொதுப் பேருந்துச் சேவையை வழங்கவிருக்கும் நான்காவது நிறுவனமான கோ அஹெட், இந்த ஆண்டின் மூன் றாவது காலாண்டில் சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது இதுவரையில் 655 பேருந்து ஓட்டுநர்களைச் சேர்த் திருக்கிறது. அவர்களில் 65% சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள்.

எஞ்சிய 35 விழுக்காட்டினரில் 68 பேர் மலேசியர்கள். வேலையில் சேர்க்கப்பட்டுள்ள ஓட்டுநர்களில் சுமார் 350 பேர் இப்போது எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத் தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர்கள். இவர்கள் புதிய நிறுவனத்துக்கு மாறிவிட்டார்கள். சிங்கப்பூரில் பேருந்துச் சேவையை நடத்துவதில் அரசாங் கம் புது வகை ஒப்பந்த ஏற்பாட்டை அமல்படுத்துகிறது. அந்த ஏற்பாட்டின்படி சென்ற நவம்பரில் இந்த பிரிட்டிஷ் நிறு வனத்துக்குக் குத்தகை கொடுக் கப்பட்டது. மொத்தத்தில் இந்த நிறுவனம் தனக்குத் தேவைப்படும் 900 ஊழியர்களில் 90 விழுக்காட்டினரைச் சேர்த்து விட்டது.

அவர்களில் 60 பேர் தொழில் நுட்ப ஊழியர்கள். தேவைப்படும் பேருந்து ஓட்டு நர்களில் மற்றவர்களை அடுத்த மாத வாக்கில் இந்த நிறுவனம் சேர்த்துவிடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இந்த நிறுவனம் அரசாங்கத் தின் மூன்றாவது குத்தகையான சிலேத்தார் பேருந்து குத்தகையைப் பெற விண்ணப்பிக்கும் சாத்தியம் இருப்பதாக கோ அஹெட் நிர் வாக இயக்குநர் நிகல் உட் தெரி வித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!