குற்றப்பதிவில்லா சான்றிதழ்: விண்ணப்பிக்க புதிய சேவை

குற்றப்பதிவில்லா சான்றிதழைப் பெறுவதற்கான புதிய மின் சேவை நாளை மறுநாள் 21ஆம் தேதியி லிருந்து தொடங்கப்பட விருப்ப தாக போலிஸ் நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்தது சிங்கப்பூரில் வரையறுக்கப்பட்ட கால நேரத்தில் எந்தக் குற்றப் பதிவும் இல்லாத தகுதியான விண்ணப்பதாரருக்கு மட்டுமே இச்சான்றிதழ் வழங்கப்படுவதாக போலிஸ் விளக்கியது. உதாரணமாக, விசா நடை முறைகளுக்காக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு இச் சான்றிதழ் தேவைப்படும். தற்சமயம், தனிநபர் இச்சான் றிதழைப் பெறுவதற்கு நேரடியாக போலிஸ் கேன்டோன்மண்ட் காம் பிளக்ஸிற்கு சென்று விண்ணப் பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்தப் புதிய மின் சேவை வாயிலாக தனி நபர் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்ப தோடு அதற்கான கட்டணத் தையும் செலுத்த முடியும்.