‘எஸ்பிசிஏ’: புதிய வளாகம் பொதுமக்களுக்குத் திறப்பு

புதிய வளாகத்தில் கடந்த ஐந்து மாதங்களாக இயங்கி வரும் விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் (எஸ்பிசிஏ) நேற்றும் இன்றும் தனது வளாகத்தைப் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து விட் டுள்ளது. சுங்கை தெங்காவில் 7,766 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்து உள்ள இந்தச் சங்கம், 300 விலங்குளை வைத்து பராமரிக்கக் கூடிய அளவிற்கு இடவசதியைக் கொண்டிருக்கிறது. இது மவுண்ட் வெர்னனில் செயல்பட்டு வந்த பழைய வளாகத்தில் பராமரிக்கப்பட்ட விலங்குகளின் எண்ணிக் கையைவிட இரு மடங்கு அதிகம்.

இதில் நாய்களுக்கென்று உடற்பயிற்சிப் பகுதி, புதிய கல்வி மையம் ஆகியவற்றோடு விரிவாக் கப்பட்ட மருத்துவமனையும் உள் ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் அங்கு சென்று பார்வையிடலாம். நேற்றைய தொடக்க விழாவின் போது 'கெட்டிங் டு ஸீரோ' எனும் புதிய முயற்சியை சங்கம் தொடங்கி வைத்தது. சிங்கப்பூரில் விலங்குகளின் எண்ணிக்கை யைக் குறைத்தல், ஆரோக்கிய மான, சிகிச்சை அளிக்கக்கூடிய விலங்குகளைக் கருணைக் கொலை செய்வதைத் தடுத்தல் திட்டத்தின் முக்கிய இலக்காகும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!