இரவுநேர கேளிக்கை விடுதி கூரை மீது ஏறிய ஆடவர் கைது

ஸுக் இரவு நேர கேளிக்கை விடுதி கூரையில் ஓர் ஆடவர் ஏறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த 23 வயது ஆடவரை அத்துமீறி நுழைந்ததாகக் கூறி போலிஸ் நேற்றுக் கைது செய்தது. அந்த ஆடவர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. எண் 17 ஜியாக் கிம் ஸ்திரீட்டில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் பற்றி அதிகாலை சுமார் 3.46 மணிக்குத் தனக்குத் தகவல் வந்ததாக ஊடகங்களிடம் பேசிய போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, அந்தச் சம்பவம் பற்றி டுவிட்டர் வலைத்தளத்தில் அதிகாலை சுமார் 4 மணிக்கு ஒருவர் பல விவரங்களைத் தெரிவித்திருந்தார். ஆடவர் ஒருவர் அந்த இரவு நேர கேளிக்கை விடுதியின் கூரையில் ஏறியதையும் மருத்துவ வாகனம், தீயணைப்பாளர்கள் அங்கு இருந்ததையும் தான் கண்டதாக அவர் தெரிவித்திருந்தார். தகவல் வந்ததை அடுத்து தீயணைப்பு வாகனங்கள், ஆதரவு வாகனங்கள், மருத்துவ வாகனம் ஆகியவற்றை தான் அங்கு அனுப்பியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. போலிஸ் புலன்விசாரணை தொடர்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!