இடைத்தேர்தல் பற்றிய பதிவேற்றங்கள்; ஜாசன் சுவாவிடம் விசாரணை

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் பற்றி இணையத்தில் இரு பதி வேற்றங்களைச் செய்திருந்ததன் தொடர்பில் ‘ஃபேப்ரிகேஷன்ஸ் அபௌட் தி பிஏபி’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகித்து நடத்துபவரான ஜாசன் சுவாவை போலிஸ் விசாரித்துள்ளது, தன்னை அந்த பதிவேற்றங்கள் பற்றி போலிஸ் வெள்ளிக்கிழமை 3 மணி நேரம் விசாரித்ததாகக் அவர் கூறினார். ஜேசன் சுவா, 46, ஓய்வுபெற்ற மென்பொருள் பொறியாளர். சுவாவின் பதிவேற்றம் பற்றி போலிஸ் கருத்துரைக்கவில்லை. புலன்விசாரணை நடப்பதாக அது தெரிவித்தது. இதற்கிடையே, கைபேசி, மடிக்கனிணி, தகவல் சேமிப்புச் சாதனம் போன்ற தன்னுடைய மின்னணுச் சாதனங் களை புலன் விசாரணைகளுக்காக போலிஸ் கைப்பற்றியது என்றும் சுவா தெரிவித்தார். மே மாதம் 7ஆம் தேதி வாக்களிப்பு நாளன்று, ஃபேப்ரி கேஷன்ஸ் அபௌட் தி பிஏபி பக்கத்தில் இரண்டு தகவல்கள் வெளியிடப்பட்டதாகச் சொல்லி மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அகஸ்டின் லீ என்பவர் போலிசில் புகார் செய்தார்.

“முரளிக்கு வாக்களியுங்கள். காரணம் அவர் உங்களுக்காக பாடுபடுகிறார். நீங்கள் அரசியல் பயணத்தில் ஓர் அங்கம் என்பதற் காக அல்ல” என்று அந்தப் பதி வேற்றங்களில் ஒன்று குறிப்பிட் டதாகவும் இடைத்தேர்தல் வேட் பாளர் டாக்டர் சீயை குறைகூறி முன்னாள் அதிபர் தேர்தல் வேட் பாளரான டான் செங் போக் தெரி வித்திருந்த ஒரு கருத்து இரண்டா வது பதிவேற்றமாக இருந்தது என்றும் அகஸ்டின் லீ தெரிவித் தார். இவர், தான் செய்த போலிஸ் புகார் அறிக்கையை ஊடகத்திற்கு அனுப்பி இருந்தார். ஃபேஸ்புக் பக்கத்தில் இடம் பெற்றிருந்த பதிவேற்றங்கள் அகற்றப்பட்டுவிட்டன.