தேசிய சேவையாளருக்கான புதிய சேமிப்புத் திட்டம் வழங்கும் பிஓஎஸ்பி

முழுநேர தேசிய சேவை­யா­ளர்­களிடம் சேமிக்­கும் பழக்­கத்தை ஊக்­கு­விக்­கும் நோக்கில் பிஓ­எஸ்பி வங்கி புதிய திட்டம் ஒன்றைத் தொடங்­கி­யுள்­ளது. 'சேவ்-அஸ்-யு-செர்வ்' எனப்­படும் அந்தத் திட்­டத்தை 'ஹோம் டீம்­என்­எஸ்', சாஃப்ரா ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து பிஓ­எஸ்பி வங்கி உரு­வாக்­கி­யுள்­ளது. இது தேசிய சேவை­யா­ள­ருக்­கா­கத் தொடங்கப்­பட்­டுள்ள முதல் வங்கிச் சேமிப்­புத் திட்­ட­மா­கும். இந்தத் திட்­டத்­தின் கீழ் தேசிய சேவை­யா­ளர்­கள் மாதந்­தோ­றும் சேமிக்­கும் தொகைக்கு ஆண்­டுக்கு 2% விகி­தத்­தில் வட்டி வழங்கப்­ப­ட­வுள்­ளது. 24 மாதங்களுக்கு மாதந்­தோ­றும் ஒரு குறிப்­பிட்ட தொகையை தேசிய சேவை­யா­ளர் இந்தத் திட்­டத்­தில் சேமிப்­பர்.

இந்தப் புதிய திட்­டத்தை உள்துறை மூத்த துணை அமைச்­ச­ரும் 'ஹோம் டீம்என்எஸ்'ஸின் தலை­வ­ரு­மான திரு டெஸ்­மண்ட் லீ நேற்று தொடங்கி வைத்தார். தேசிய சேவை­யா­ளர்­கள் 'ஹோம் டீம்­என்­எஸ்=பேஷன்=பிஓ­எஸ்பி' பற்று அட்டை, சாஃப்ரா டிபிஎஸ் பற்று அட்டை ஆகி­ய­வற்றைப் பயன்­படுத்­தினால் 2% கூடுதல் தள்­ளு­ப­டி­யும் பெறுவர். வர­வேற்­பைப் பொறுத்து இத் திட்­டத்தை பொது­மக்­களுக்­கும் விரி­வு­படுத்­தத் திட்­ட­மி­டு­வ­தாக பிஓ­எஸ்பி வங்கி தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!