‘ஓ’ நிலைத் தேர்வுக்கு முன்பாகவே பட்டயப் படிப்பில் இடம் பிடிக்கலாம்

நீ ஆன், தெமாசெக் பல­துறைத் தொழிற்கல்­லூ­ரி­கள், தங்க­ளது முழுநேர ஆரம்பக்­கல்­விப் பட்டய வகுப்­பு­களி­லுள்ள 300க்கும் மேற்­பட்ட இடங்களை புதன்­கிழமை தொடங்­கும் முன்­ப­திவு சேர்ப்பு நட­வ­டிக்கை­யில் வழங்­கு­கின்றன. இவ்­வாண்டு தொடங்கப்­பட்ட முன்­ப­திவு சேர்ப்பு நட­வ­டிக்கை­யின் மூலம் மாண­வர்­கள் பொதுக்­கல்­விச் சான்­றி­தழ் சாதாரணநிலைத் தேர்வு எழு­து­வதற்கு முன்­பா­கவே தங்களுக்­குப் பிடித்த பட்டய வகுப்­பில் இடம் பிடிக்­க­லாம். ஒரு குறிப்­பிட்ட துறையில் திறமை­யும் ஆர்­வ­மும் இருப்­ப­தோடு விளை­யாட்டு, சமூகச் சேவை போன்ற துறை­களி­லும் ஈடு­பாடுள்ள மாண­வர்­கள் முன்­ப­திவு சேர்ப்பு நட­வ­டிக்கை­யில் பங்­கு­பெ­ற­லாம்.

பல­துறைத் தொழிற்­கல்­லூரி நேரடி சேர்ப்பு நட­வ­டிக்கைக்­குப் பதிலாக முன்­ப­திவு நட­வ­டிக்கை நடப்­புக்கு வரு­கிறது. பல­துறைத் தொழிற்கல்­லூரி சிறப்­புக் கூட்டுச் சேர்ப்பு நட­வ­டிக்கை­யும் இதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இரு பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­களும் முழுநேர ஆரம்பக்­ கல்­விப் பட்டய வகுப்­பு­களை விரி­வு­படுத்தி வரு­கின்றன. இவ்­ வாண்டு மூன்று பட்­ட­யப் படிப்­பு­களில் சாதனை அளவாக 590 மாண­வர்­கள் சேர்த்­துக் கொள்­ளப்­பட்­ட­னர். இது சென்ற ஆண்டை­விட 74 விழுக்­காடு அதிகம். இவர்­களில் 265 மாண­வர்­கள் நேரடி சேர்ப்பு நட­வ­டிக்கை அல்லது சிறப்­புக் கூட்டுச் சேர்ப்பு நட­வ­டிக்கை மூலம் சேர்த்­துக் கொள்­ளப்­பட்­ட­னர். நீ ஆன் பல­துறைத் தொழிற்­கல்­லூரி ஆரம்பக்­கல்­விப் பட்­ட­யம், குழந்தை மனநல ஆரம்பக்­கல்­விப் பட்­ட­யம் ஆகி­ய­வற்றை­யும் தெமாசெக் பல­துறைத் தொழிற்­கல்­லூரி ஆரம்பக்­கல்­விப் பட்­ட­யத் தை­யும் வழங்­கு­கின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்சி ஓட்டுநர் சுயநினைவை இழந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 72 வயதான அந்த டாக்சி ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் காயம் அடைந்தனர். காணொளிப்படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜி ரோடு விஜிலன்ட்

24 Mar 2019

பாதசாரிகள் மீது டாக்சி மோதியதில் பெண் பலி

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி