1.54 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு

கிட்டத்தட்ட 1.54 மில்லியன் சிங்கப்பூரர்கள் $890 மில்லியன் மதிப்புள்ள ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு களையும் மெடிசேவ் பணம் நிரப்பு தலையும் இந்த ஆண்டில் பெறு வர். நிதி அமைச்சு நேற்று இதனைத் தெரிவித்தது. தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் ஜூலை 1ஆம் தேதிக்குள் அவர் களுக்குரிய ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு பற்றியும் இதர பட்ஜெட் அனு கூலன்கள் பற்றியும் விவரிக்கும் கடிதத்தைப் பெறுவர். ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு அனு கூலன்களின்கீழ், கிட்டத்தட்ட 1.3 மில்லியன் தகுதியுள்ள சிங் கப்பூரர்கள் $300 வரையிலான ரொக்கத்தைப் பெறுவர். கூடுதலாக, வரவுசெலவுத் திட்டம் 2016ல் அறிவித்தபடி, $200 வரையிலான ஒருமுறை வழங்கப்படும் சிறப்புத் தொகையை அவர்கள் பெறுவர். அதாவது, தகுதியுள்ளவர்கள் இந்த ஆண்டில் $500 வரை பெறுவர். இந்தத் தொகை ஆகஸ்ட்டிலும் நவம்பரிலும் பிரித்து வழங்கப்படும்.

மேலும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 425,000 சிங்கப்பூரர்கள் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் $450 வரையிலான மெடிசேவ் பணம் நிரப்புதலைப் பெறுவர். இவை தவிர, 1959 டிசம்பர் 31ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் பிறந்த, முன்னோடித் தலைமுறை அனுகூலன்களைப் பெற்றிராத சிங்கப்பூரர்கள் (இவ் வாண்டில் 57 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்) 2018ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் அவர்களது மெடிசேவ் கணக்கில் $200 வரை நிரப்பப் பெறுவர். இந்த ஆண்டுக்குரிய இந்தப் பணம் நிரப்புதலும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறும். முன்னோடித் தலைமுறையினர் தங்களுக்குரிய $200 முதல் $800 வரையிலான மெடிசேவ் பணம் நிரப்புதலை ஜூலை மாதம் பெறுவர். கடிதம் வரும் வரை காத் திருப்பதற்குப் பதில், ஜிஎஸ்டி பற்றுச் சீட்டு அனுகூலனுக்கு தாங்கள் தகுதி பெற்றுள்ளனரா என்பதைத் தெரிவிக்கும் குறுந் தகவல் அறிவிப்பைப் பெற சிங் கப்பூரர்கள் பதிவு செய்துகொள் ளலாம் என அமைச்சு தெரிவித்து உள்ளது.

ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுக்குரிய இணையத்தளத்தினுள் (www.gstvoucher.gov.sg) சிங்பாஸ் பயன்படுத்தி நுழைந்து குறுந் தகவல் அறிவிப்புகளுக்குப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை 21 வயது முதல் 35 வயது வரை யிலானவர்கள் பெறுவர். காகிதமற்ற, அதிக சுற்றுப்புற சூழல் சார்ந்த நிலையை ஏற் படுத்தும் நோக்கில் வருங் காலத்தில் கடிதங்களை அனுப்பு வதற்குப் பதில் குறுந்தகவல்களை அனுப்பலாமா என்பது பற்றி ஆராயப்போவதாக அமைச்சு கூறியுள்ளதுது. இந்த இணையத்தளத்தில் ஜிஎஸ்டி அனுகூலன்கள் பற்றியும் www.singaporebudget.gov.sg இணையத்தளத்தில் பட்ஜெட் அனுகூலன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!