உள்ளூர் நிறுவனங்கள் உலகமயமாக ஐஇ உதவிக்கரம்

சிங்கப்பூர் நிறுவனங்கள் அனைத்துலகமயமாவதற்குத் தேவைப்படும் ஆற்றல்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஐஇ சிங்கப்பூர் அமைப்பு ஆதரவுக்கரம் நீட்டுகிறது. உலக அனுபவங்களுடன் கூடிய ஆற்றல்மிக்க ஊழியர் களை சிங்கப்பூர் நிறுவனங் கள் பெறுவதற்கு உதவ தாங்கள் விரும்புவதாக நேற்று ஐஇ சிங்கப்பூர் குறிப் பிட்டது. இளம் தேர்ச்சியாளர் கள் செயல்திட்டம் என்ற ஒரு திட்டத்தின் மூலம் இந்த அமைப்பு உதவி வருகிறது. பல்கலைக்கழகங்களிலும் பலதுறை தொழிற்கல்லூரி களிலும் படிக்-கும் மாண வர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி பயிற்சிபெறச் செய்து இங்கே அவர்களுக்குத் தேவையான தேர்ச்சிகளைப் போதித்து அவர்களை ஆற்றல்மிக்க ஊழியர்களாக உருவாக்குவது இந்தச் செயல்திட்டத்தின் நோக்கம்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்த வர்களின் எண்ணிக்கை 2013ல் 500 ஆக இருந்தது. சென்ற ஆண்டில் இந்த எண்ணிக்கை 900 ஆகக் கூடியது. ஐஇ சிங்கப்பூர் 2014ல் ஓர் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் கால்வாசி நிறுவனங்கள், வெளிநாடு தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்தன. இத்தகைய ஊழியர்களில் மேலும் பலரை நியமிக்க தாங்கள் விரும்புவதாக பத்தில் நான்கு நிறுவனங்கள் குறிப்பிட்டன. இந்தச் செயல் திட்டம் ஒருபுறம் இருக்க, ஐஇ வர்த்தக அமைப்பு, நிபுணத்துவர்களும் நிர்வாகிகளும் மேலாளர் களும் வெளிநாட்டு அனுபவங்களைப்பெற உதவியும் வருகிறது. அனைத்துலக அனுபவத் தேர்ச்சிகளைப் பெறுவதற்காக சென்ற ஆண்டு அக்டோபரில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் படிப்பு உதவித் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியது. இந்தத் திட்டப்படி தேர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள $5,000 கிடைக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!