விதி மீறிய இரண்டு மருந்தகங்கள் நீக்கம்

சாஸ் (Chas) எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டத்திலிருந்து இரண்டு பல் மருந்தகங்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன. பொய்யான கோரிக்கைகளை விடுத்தது, வழிகாட்டி நெறிமுறை களை மீறியது ஆகியவற்றுக்காக அந்த மருந்தகங்களுக்கு எதிராக இந்த நடிவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. அந்த மருந்தகங்கள் ஜூலை 8 முதல் சாஸ் திட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று சுகாதார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது. அங் மோ கியோ, மரின் பரேடில் இருக்கும் ஃபீனிக்ஸ் டென்டல் சர்ஜரி என்ற மருந்தகங்கள் சுகாதார அமைச்சின் விதிமுறை களுக்கும் வழிகாட்டி நெறிமுறை களுக்கும் புறம்பான கோரிக்கை களைத் தொடர்ந்து விடுத்து வந்தன. இது இந்த அமைச்சு நடத்திய கணக்குத் தணிக்கை மூலம் தெரியவந்தது. இடம்பெறாத நடைமுறைகளுக் கான பல கோரிக்கைகளும் அவற் றில் அடங்கும். தணிக்கை முடிவுகள் பற்றி அந்த இரண்டு மருந்தகங்களுக் கும் சென்ற மாதம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மருந்தகங்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பு உள்ளதா என்பதை பற்றி விசாரிக்க இந்த விவகாரத்தை அமைச்சு போலிசுக்கு அனுப்பி இருக்கிறது.

சாஸ் என்பது நாடளாவிய ஒரு சுகாதாரச் செயல்திட்டம். அதில் கலந்துகொள்ளும் பொது மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் ஆகியோரிடம் குறைந்த, நடுத்தர வருமான குடும்பத்தினரும் முன் னோடித் தலைமுறை சிங்கப்பூரர் களும் சிகிச்சை பெற மானியம் உண்டு. சிங்கப்பூரில் 600க்கும் அதிக சாஸ் பல் மருந்தகங்களில் நோயாளிகள் சிகிச்சை நாடலாம். மருந்தகங்கள் இத்தகைய தவ றான நடைமுறைகளில் ஈடுபடு வதை தான் கடுமையான ஒன்றாக கருதுவதாக அமைச்சு கூறியது. சூழ்நிலையை அமைச்சு பரிசீலிக்கும். போலிஸ் புலன் விசாரணை மூலம் தெரியவருவதை அமைச்சு கருத்தில்கொள்ளும். அந்த மருந்தகங்கள் சாஸ் திட்டத்தில் மீண்டும் ஈடுபட அனுமதிப்பது பற்றி பிறகுதான் அமைச்சு முடிவுசெய்யும். இதற்கிடையே, அந்த மருந்த கங்களில் பணியாற்றும் பல் மருத் துவர்கள் சிங்கப்பூர் பல் மருத்து வர்கள் மன்றத்திடம் தாங்கள் பதிந்துகொண்டிருப்பதற்கு ஏற்ப தொடர்ந்து தொழில் நடத்தலாம். ஆனால் இடைநீக்க காலத்தின் போது அந்த மருந்தகங்களில் அவர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு சாஸ் மானியம் கிடைக்காது.

சாஸ் திட்டத்தின் கீழ் பொய்க் கோரிக்கைகளை விடுத்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு மருந்தங்களில் ஒன்று அங் மோ கியோவில் இருக்கும் ஃபீனிக்ஸ் டென்டல் சர்ஜரி என்ற மருந்தகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்