அதிக செலவுமிக்க நகர்களில் சிங்கப்பூருக்கு 4ஆம் இடம்

வெளிநாட்டினரைப் பொறுத்த வரையில் ஹாங்காங்தான் உலகி லேயே ஆகஅதிக செலவுமிக்க நகரமாக இருக்கிறது என்று மெர்சர்ஸ் வருடாந்திர ஆய்வு தெரிவிக்கிறது. அந்த ஆய்வில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அங்கோ லாவின் தலைநகரம் லுவாண்டா முதலிடத்தில் இருந்து வந்தது. அதை இந்த ஆண்டில் ஹாங்காங் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஹாங்காங் டாலர் வலுவாக இருந்ததே இதற்கு காரணம் என்று ஆய்வு குறிப்பிட்டு இருக் கிறது. மெர்சர்ஸ் ஆலோசனைக் குழுமம் உலகின் 200க்கும் மேற்பட்ட நகர்களில் 200க்கும் அதிக வசதிகள், சேவைகள், பொருட்கள் முதலான அம்சங்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்கிறது.

பொதுவாகச் சொல்லவேண்டு மானால் உலகம் முழுவதுமே விலைகள் நிலையாக இருந்தன என்று மெர்சர்ஸ் பிரான்ஸ் நிறு வனத்தின் புருனோ ரோக்மண்ட் தெரிவித்தார். இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் நான்காவது இடத்தில் உள்ளது. சூரிச் நகர் மூன்றாவது இடத் திலும் ஐந்தாவது இடத்தில் தோக்கியோவும் உள்ளன. வலுவான டாலர் காரணமாக அமெரிக்காவின் பல நகர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்தது. பண மதிப்பு இறங்கிய நாடுகளில் உள்ள நகர்களைப் பார்க்கையில் மாஸ்கோவில்தான் விலைகள் மிகவும் அதிகமாக இறங்கின. ஆகஅதிக செலவு மிகுந்த நகர்களின் பட்டியலில் 17வது இடத்தில் இருந்த மாஸ்கோ 67வது இடத்திற்கு இறங்கி விட்டது. இந்தப் பட்டியலில் ஆகக் கடைசியாக இருக்கும் நகரம் நமீபியாவின் தலைநகரமான வின்டோக்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்சி ஓட்டுநர் சுயநினைவை இழந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 72 வயதான அந்த டாக்சி ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் காயம் அடைந்தனர். காணொளிப்படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜி ரோடு விஜிலன்ட்

24 Mar 2019

பாதசாரிகள் மீது டாக்சி மோதியதில் பெண் பலி

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி