வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் ஏறுமுகம்

அனைத்து பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் நேற்று ஏற்றம் கண்டன. சிறிய கார்களுக்கான கட்டணம் கிட்டத்தட்ட $1,500 உயர்ந்து $55,200 ஆனது. இரண்டு வாரத்துக்கு முன்னர் அது $53,700 ஆக இருந்தது. பெரிய கார்களுக்கான கட்டணம், $56,000யிலிருந்து $57,010 ஆனது. பொதுப் பிரிவுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $57,390க்கு உயர்ந்தது. வர்த்தக வாகனங்களுக்கும் பேருந்துகளுக்குமான கட்டணம் $48,002க்கு உயர்ந்தது. மோட்டார் சைக்கிள்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் இரு வாரங்களுக்கு முன் இருந்ததைவிட ஒரு வெள்ளியே உயர்ந்து, $6,303 ஆனது.